ஐபிஎல் 2023 : சரிவை சரிசெய்து கோப்பையை வெல்ல – கொல்கத்தா நீக்கவேண்டிய வீரர்களின் பட்டியல்

ROhit Sharma MI vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நீண்ட வருடங்களுக்குப் பின் 3-வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற்போல் முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று அசத்திய அந்த அணியில் அதன்பின் செய்யப்பட்ட தேவையற்ற மாற்றங்கள் வரிசையாக 5 தோல்விகளை பரிசளித்து கடைசியில் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் 7-வது இடத்தை பிடிக்கும் அளவுக்கு பின்தங்க வைத்தது.

கேப்டனாக இருந்தாலும் அணியை தேர்வு செய்வதில் சிஇஓ மற்றும் பயிற்சியாளர் தலையிடுவதால் தம்மால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஷ்ரேயஸ் ஐயர் உண்மையை உடைத்தது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. மேலும் ஷ்ரேயஸ் ஐயர், ஆண்ட்ரே ரசல் போன்ற ஒருசில வீரர்களைத் தவிர பெரும்பாலான வீரர்கள் சுமாராக செயல்பட்டதும் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. மொத்தத்தில் இந்த வருடம் நிறைய தோல்விகளையும் பாடங்களையும் கற்றுள்ள அந்த அணி அடுத்த வருடம் 3-வது கோப்பையை வெல்வதற்கு நிறைய சரிவுகளை சரி செய்ய வேண்டியுள்ளது. அதற்காக அடுத்த வருடத்திற்குள் அந்த அணி நிர்வாகம் விடுவிக்க வேண்டிய வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. அஜிங்கிய ரகானே: கடந்த சில வருடங்களாக சதமடிக்க முடியாததால் இந்திய டெஸ்ட் அணியில் இடத்தை இழந்து நிற்கும் இவருக்கு இந்த வருட ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நிர்வாகம் கொடுத்த வாய்ப்பில் அனுபவத்தை காட்ட தவறினார்.

சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் 44 ரன்கள் எடுத்தது தவிர பெரும்பாலும் சுமாராக செயல்பட்ட இவர் மொத்தம் 7 போட்டிகளில் வெறும் 133 ரன்களை 19.00 என்ற சராசரியில் 103.91 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து மோசமாக செயல்பட்டார். எனவே இவரை யோசிக்காமல் விடுவித்து வேறு நல்ல ஓபனிங் பேட்ஸ்மேனை கொல்கத்தா வாங்கலாம்.

- Advertisement -

2. ஆரோன் பின்ச்: ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய அனைத்து அணிகளிலும் விளையாடி அதிக அணிகளுக்கு விளையாடிய வீரர் என்ற சாதனை படைத்த இவர் எந்த அணியிலும் ஒரு வருடத்திற்கு மேல் தாங்க முடியாத அளவுக்கு வரலாற்றில் மோசமாக செயல்பட்டு வருகிறார்.

இருப்பினும் 2021 டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியாவிற்கு கேப்டனாக வென்ற காரணத்தால் இந்த ஐபிஎல் தொடர் துவங்கியதற்கு பின் 1.50 கோடிக்கு வாங்கிய கொல்கத்தா ஆரம்பத்திலேயே வாய்ப்பளித்தது. ஆனால் 5 போட்டிகளில் வெறும் 86 ரன்களை 17.20 என்ற மோசமான சராசரியில் எடுத்த இவர் “நான் உங்கள் அணிக்கும் ஒத்து வர மாட்டேன்” என்று கொல்கத்தா நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளதால் இவரை தாராளமாக அடுத்த வருடம் கழற்றி விடலாம்.

- Advertisement -

3. ஷிவம் மாவி: 7.25 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட இவர் அதற்கேற்றார்போல் செயல்படாமல் 6 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை 10.32 என்ற மோசமான எக்கனாமியில் பந்து வீசினார்.

எனவே இளம் வீரராக இருக்கும் இவரை அடுத்த வருடம் தாராளமாக விடுவித்து ஒருவேளை திரும்ப வாங்க நினைத்தால் குறைந்த விலையில் வாங்க முயற்சிக்கலாம்.

- Advertisement -

4. ஷெல்டன் ஜாக்சன்: விக்கெட் கீப்பர்கள் என்றால் சரவெடியாக பேட்டிங் செய்தால் மட்டுமே இடம் பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ள இந்த காலத்தில் இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்காக விக்கெட் கீப்பராக அற்புதமாக செயல்பட்ட இவர் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் போன்ற முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை அள்ளினார்.

ஆனால் பேட்டிங்கில் 5 போட்டிகளில் வெறும் 23 ரன்களை மட்டுமே எடுத்த இவர் கடந்த 2017இல் அறிமுகமாக கடைசி முறையாக விளையாடிய போது 4 போட்டிகளில் 38 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனவே பேட்டிங்கில் கொஞ்சம் கூட முன்னேறாத இவரை விடுவித்து அடுத்த வருடம் வேறு நல்ல விக்கெட் கீப்பரை கொல்கத்தா வாங்க முயற்சிக்கலாம்.

5. சாம் பில்லிங்ஸ்: அவர் சொதப்பினார் என்பதற்காக 2 கோடிக்கு வாங்கப்பட்ட இவருக்கு 8 போட்டிகளில் கொல்கத்தா வாய்ப்பளித்தது. அதில் வெறும் 169 ரன்களை 24.14 என்ற சுமாரான சராசரியில் 122.46 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த இவரும் சுமாராகவே செயல்பட்டார்.

இதனால் தினேஷ் கார்த்திக்கை விடாமல் வைத்திருந்திருக்கலாம் என்று வருந்தும் கொல்கத்தா அடுத்த வருடம் இவரையும் விடுவித்து வேறு யாரையாவது வாங்க முயற்சிக்க வேண்டும்.

சந்தேக பட்டியல்:
1. வருண் சக்கரவர்த்தி: கடந்த 2020, 2021 ஆகிய சீசன்களில் அட்டகாசமாக பந்துவீசிய தமிழக வீரரான இவரை 8 கோடி என்ற பெரிய தொகைக்கு இந்த வருடம் கொல்கத்தா நம்பி தக்க வைத்தது. ஆனால் தினேஷ் கார்த்திக் எனும் சாவி இல்லாததால் பொம்மையாக மாறிய இவர் 11 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை 8.51 என்ற சுமாரான எக்கனாமியில் எடுத்து சுமாராக செயல்பட்டது அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்தது.

அதனால் ஒரு கட்டத்தில் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட இவர் தினேஷ் கார்த்திக் இல்லாத காரணத்தால் அடுத்த வருடம் விடுவிக்கலாம் அல்லது விடுவித்து இதை விட குறைவான விலையில் மீண்டும் வாங்கி வாய்ப்பளிக்கலாம்.

2. வெங்கடேஷ் ஐயர்: 2021 சீசனில் இந்திய மண்ணில் தடுமாறிய கொல்கத்தா துபாய் நடந்த 2-வது பகுதியில் அசத்தி இறுதிப் போட்டி வரை செல்வதற்கு ஒரு ஆல்-ரவுண்டராக ஜொலித்த இவர்தான் காரணமாகும். அதனால் இந்தியாவிற்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்த இவரை 8 கோடிக்கு கொல்கத்தா தக்க வைத்தது. ஆனால் இம்முறை 12 போட்டிகளில் வெறும் 182 ரன்களை 16.55 என்ற மோசமான சராசரியில் எடுத்த இவர் பந்து வீச்சிலும் 4 இன்னிங்சில் விக்கெட் எடுக்கவில்லை.

இந்த வருட கொல்கதாவின் தோல்விக்கு இவரின் இந்த மோசமான ஆட்டம் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் இளம் வீரராக இருக்கும் இவரை அடுத்த வருடம் விடுவித்து குறைந்த விலையில் வாங்கி மீண்டும் வாய்ப்பளித்து பார்க்கலாம்.

Advertisement