
இந்திய வீரர் விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். இந்தியாவுக்காக கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் பெரும்பாலான போட்டிகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் 26,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினர். உலகின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஒரு சில ஃபார்மட்டில் மட்டுமே அசத்துவது வழக்கமாகும். ஆனால் 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 என்ற பேட்டிங் சராசரியை கொண்டுள்ளதே விராட் கோலியின் சிறப்பம்சமாகும்.
அதே போல அவருடைய தலைமையில் தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய டெஸ்ட் தொடரை வென்றது. அந்த வகையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள விராட் கோலி ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு அடையாளமாகவும் திகழ்கிறார். அதனால் அவர் ஏராளமான இளம் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.
அந்த வரிசையில் தாமும் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகை என்று நியூசிலாந்தை சேர்ந்த 22 வயதாகும் இளம் வீராங்கனை சாரா ஜெட்லி கூறியுள்ளார். நியூசிலாந்தின் வெலிங்டன் பிளேஸ் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் அவர் இதுவரை 11 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை என்ற எக்னாமியில் எடுத்துள்ளார். இந்த சூழ்நிலையில் ஒருநாள் விராட் கோலிக்கு எதிராக பந்து வீச விரும்புவதாக சரா கூறியுள்ளார்.
அத்துடன் அவருடன் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதே தம்முடைய இலக்கு என்றும் சாரா தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது எனக்கு மிகவும் அடிப்படையான விஷயம். மகளிர் கிரிக்கெட்டில் பந்து வீசுவது மிகவும் கடினமானது. ஆனால் ஆடவர் கிரிக்கெட்டில் நான் விராட் கோலிக்கு எதிராக பந்து வீச விரும்புகிறேன்”
இதையும் படிங்க: இந்திய அணியில் அவரை மட்டும் சேக்கலனா ஆஸ்திரேலிய அணிக்கெதிராக கஷ்டப்படுவாங்க – முன்னாள் வீரர் எச்சரிக்கை
“அப்படியே விராட் கோலியுடன் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும். அதுவே என்னுடைய இலக்கு” என்று கூறினார். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் விராட் கோலி விளையாட உள்ளார். அதன் பின் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.