இந்திய அணியில் அவரை மட்டும் சேக்கலனா ஆஸ்திரேலிய அணிக்கெதிராக கஷ்டப்படுவாங்க – முன்னாள் வீரர் எச்சரிக்கை

IND
- Advertisement -

இந்த ஆண்டு இறுதியில் இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட இருக்கிறது. கடந்த இருமுறை இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் மூன்றாவது முறையாக அங்கு டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

அதேவேளையில் இந்திய அணிக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் நான்கு முறை தோல்வியை சந்தித்துள்ள ஆஸ்திரேலிய அணியானது இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது.

- Advertisement -

கடந்த இருமுறையை விட தற்போது உள்ள இந்திய அணி முற்றிலும் புதிதான அணி என்பதனால் அங்கு எவ்வாறு செயல்படப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பாசித் அலி ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரில் புஜாரா இடம்பெறவில்லை என்றால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் மீது தான் அழுத்தம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் புஜாரா இல்லை என்றால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பின்னடைவை சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : புஜரா இந்திய அணியில் இல்லாமல் ஆஸ்திரேலியாவிற்கு சென்றால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மீது அழுத்தம் ஏற்படும்.

- Advertisement -

புஜாரா ஒருபுறம் நிலைத்து நின்று பந்துகளை வீணடித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சோதித்தால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அது எளிதாக ரன் குவிக்க வாய்ப்பினையும் வழங்கும் என்று பாசித் அலி கூறியுள்ளார். இருப்பினும் கடந்த சில தொடர்களாகவே புஜாரா இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருவதால் நிச்சயம் இந்த தொடரிலும் இடம்பெற மாட்டார் என்றே தெரிகிறது.

இதையும் படிங்க : சுப்மனுக்கு ஆபத்திருக்கு.. 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோஹித்துடன் அவர் தான் ஓப்பனிங் ஆடுவாரு.. டிகே கணிப்பு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இதுவரை 25 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள புஜாரா 49.38 சராசரி உடன் 2074 ரன்கள் குவித்துள்ளார் இதில் 5 சதம் மற்றும் 11 அரைசதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement