சுப்மனுக்கு ஆபத்திருக்கு.. 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோஹித்துடன் அவர் தான் ஓப்பனிங் ஆடுவாரு.. டிகே கணிப்பு

Dinesh Karthik
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்வதே தம்முடைய இலக்கு என்று கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் கூறியிருந்தார்.

இருப்பினும் அதற்கு முன்பாக இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து இந்தியா தோற்றது. அந்த தோல்விக்கு கேப்டன் ரோஹித் சர்மாவை தவிர்த்து பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. குறிப்பாக புதிய துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் மிகவும் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

- Advertisement -

கில்லுக்கு ஆபத்து:

ஏனெனில் ரோஹித் சர்மா விளையாடிய அதே பிட்ச்சில் அதே பவர்பிளே ஓவர்களில் அதே இலங்கை பவுலர்களிடம் சுப்மன் கில் திணறலாக விளையாடினார். அதனால் அவரை நீக்கிவிட்டு யசஸ்வி ஜெய்ஸ்வாலை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். ஏனெனில் கடந்த ஒரு வருடமாக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்ரில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வருகிறார்.

அத்துடன் இடது – வலது கை ஜோடியாக இருப்பதால் ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்குவது நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் சுப்மன் கில் இப்படியே சுமாராக விளையாடினால் ஜெய்ஸ்வால் புதிய துவக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய நிலைமையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக சுப்மன் கில் விளையாடவே வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார்.

- Advertisement -

ஓப்பனிங் ஜோடி:

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் – கில் ஆகியோர் நல்ல கலவை. ஆம் ஜெய்ஸ்வால் பேக்-அப் துவக்க வீரராக விளையாடுவதற்கு நல்ல வாய்ப்புள்ளது. சொல்லப்போனால் சுப்மன் கில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை எனில் அவர் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை விரைவாக பெறுவார்”

இதையும் படிங்க: ஒளிஞ்சு கம்பேக் கொடுக்க முடியாது.. அந்த வெற்றியை மனசுல வெச்சு இந்தியாவை வீழ்த்துவோம்.. ஸ்மித் உறுதி

“இந்திய அணியில் ஏற்கனவே ஓரளவு இதமான மிடில் ஆர்டர் இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் நாம் இன்னும் 3 போட்டிகளில் விளையாட உள்ளோம். எனவே சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார். இந்த இடத்தில் சுப்மன் கில்லை துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ள சுமாராகவே விளையாடினாலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement