ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோத உள்ள 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை ரசிகர்களிடம் இப்போதே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் துவங்கும் அந்தத் தொடரில் இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திரேலிய மண்ணில் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் இந்தியா 2 தொடர்களை வென்றது.
அதனால் 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் 2 அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா வரலாறு படைத்தது. மறுபுறம் சொந்த மண்ணில் கில்லியான ஆஸ்திரேலியா சமீப காலங்களாகவே இந்தியாவிடம் தடுமாறி வருகிறது. சொல்லப்போனால் ஆஸ்திரேலிய அணி கடைசியாக இந்தியாவுக்கு எதிராக பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2014/15ஆம் ஆண்டு சென்றது.
ஒளிய முடியாது:
அதன் பின் 10 வருடமாகியும் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆரம்பத்திலேயே பேட்டிங்கில் தடுமாறினால் பின்னர் கம்பேக் கொடுப்பது கடினம் என்று ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். அத்துடன் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பையை வென்றதாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
எனவே அதை மனதில் வைத்துக் கொண்டு இம்முறை இந்தியாவை தோற்கடித்து 10 வருடங்கள் கழித்து பார்டர் – காவாஸ்கர் கோப்பை ஆஸ்திரேலியா வெல்லும் என்று ஸ்மித் உறுதியாக தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “2 போட்டிகள் கொண்ட தொடரில் வேண்டுமானால் நீங்கள் தப்பிக்கலாம். ஆனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உங்களால் ஒளிய முடியாது”
10 வருடங்கள் கழித்து:
“எனவே உங்களை யாராவது பலகையில் அடித்தால் அதிலிருந்து கம்பேக் கொடுப்பது கடினம். எனவே இது அற்புதமான தொடராக இருக்கப் போகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா தற்சமயத்தில் உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த 2 அணிகளாக திகழ்கின்றன. கடந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நாங்கள் விளையாடி இந்தியாவை தோற்கடித்தோம்”
இதையும் படிங்க: இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாஹீர் கானுக்கு கிடைக்கவுள்ள புதிய பதவி – விவரம் இதோ
“அதே போல எங்களுடைய ஊரில் அவர்கள் கடந்த சில வருடங்களாக மிகச் சிறப்பாக விளையாடினர். பார்டர் – கவாஸ்கர் கோப்பையை நாங்கள் வென்று 10 வருடங்களாகி விட்டது. எனவே இந்த வருடம் நாங்கள் அதை வென்றாக வேண்டும்” என்று கூறினார். இது போக நேதன் லயன், கேப்டன் பட் கமின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட் போன்ற ஆஸ்திரேலிய வீரர்களும் இந்தியாவை வீழ்த்த காத்திருப்பதாக சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.



