சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தற்போது 43 வயது எட்டியுள்ள வேளையில் இந்த ஆண்டு நடைபெறும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது அவருக்கு கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையுடன் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை தவறவிட்ட பின்னர் அளித்த பேட்டியில் தோனி கூறுகையில் :
தோனி போயிட்டா நஷ்டம் அவங்களுக்கு தான் : விரிதிமான் சஹா
ரசிகர்களின் அன்பிற்காகவும், ஆதரவிற்காகவும் தான் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவேன் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் தோனி அன்கேப்டு வீரராக நான்கு கோடி ரூபாய்க்கு சென்னை அணியால் தக்க வைக்கப்பட்டார்.
அதன் காரணமாக இந்த ஒரு ஆண்டு அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது. மேலும் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு அறிக்கும்போது கோப்பையுடன் அறிவிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவதால் இந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டும்.
இந்நிலையில் தற்போது 43 வயதை எட்டியுள்ள மகேந்திர சிங் டோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தால் என்ன நடக்கும்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான விரிதிமான் சஹா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பொதுவாக பிரான்ச்சைசி கிரிக்கெட் என்பது ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் நடைபெறுவது தான்.
ஒருவேளை தோனி போன்ற பெரிய வீரர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் போது ரசிகர்கள் குறைய துவங்குவார்கள். அதிலும் குறிப்பாக தோனி சென்னை அணியில் இருந்து வெளியேறினால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது. மேலும் அவரைப் போன்று விராட் கோலி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றால் ஆர்சிபி அணியின் ரசிகர்களின் எண்ணிக்கை குறையும் என்று விரிதிமான் சஹா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ப்ளீஸ் ரோஹித் நீங்க மட்டும் இதை விட்டுட்டா ஆஸியை சாய்க்க முடியாது.. ஆகாஷ் சோப்ரா அசாத்திய கோரிக்கை
ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சிஎஸ்கே அணியானது எதிர்வரும் மார்ச் 23-ஆம் தேதி தங்களது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.



