வீடியோ : ட்ரவுசரை உல்ட்டாகவாக போட்டதால் கலாய்த்த ரசிகர்கள் – கலகலப்பான பின்னணி காரணத்தை பகிர்ந்த சஹா

Wriddhiman Saha
Advertisement

கோடைகாலத்தில் இந்திய ரசிகர்களுக்கு பரபரப்பான போட்டிகளுடன் விருந்து படைத்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 51வது லீக் போட்டியில் லக்னோவை 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் 8வது வெற்றியை பதிவு செய்து ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை 90% ஆரம்பத்திலேயே உறுதி செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ரிதிமான் சஹா 81 (43) சுப்மன் கில் 94* (51) என தொடக்க வீரர்களின் அதிரடியான ரன் குவிப்பால் 20 ஓவர்களில் 227/2 ரன்கள் சேர்த்தது.

அதை துரத்திய லக்னோவுக்கு கெய்ல் மேயர்ஸ் 48 (32) குயின்டன் டீ காக் 70 (41) என தொடக்க வீரர்கள் அதிரடியான ரன்களை எடுத்ததால் 10 ஓவர்களில் 102/1 என்ற நல்ல தொடக்கத்தை பெற்று வெற்றியை கையில் வைத்திருந்து. ஆனால் அதன் பின் தீபக் ஹூடா 11, மார்கஸ் ஸ்டோனிஸ் 4, நிக்கோலஸ் பூரான் 3, க்ருனால் பாண்டியா 0 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி இறுதியில் லக்னோவை 171/7 ரன்களுக்கு பெட்டி பாம்பாக அடக்கிய குஜராத் அபார வெற்றி பெற்றது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 4 விக்கெட்களை எடுத்த நிலையில் 94* ரன்கள் விளாசிய சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

உல்ட்டாவான ட்ரவுசர்:
முன்னதாக அந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரித்திமான் சகா 10 பவுண்டரி 4 சிக்ஸருடன் 81 (43) ரன்கள் குவித்து விராட் கோலியின் பாராட்டை பெறும் அளவுக்கு பேட்டிங்கில் மிரட்டினார். ஆனால் அடுத்ததாக ஃபீல்டிங் செய்வதற்காக 3வது ஓவரில் களமிறங்கிய அவர் தன்னுடைய கால் சட்டையை நேராக அல்லாமல் தலைகீழாக மாற்றி அணிந்து கொண்டு விளையாடினார். குறிப்பாக ஸ்பான்சர்கள் பெயர் அவருடைய பின்புறத்தில் இருந்ததை பார்த்த ரசிகர்கள் போட்டி துவங்கும் அவசரத்தில் சகா தலைகீழாக அணிந்து கொண்டு வந்ததை வழக்கம் போல சமூக வலைதளங்களில் கலாய்த்தனர்.

- Advertisement -

குறிப்பாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை வந்ததால் முதலிரண்டு ஓவர்களில் கேஎஸ் பரத் தற்காலிகமாக விக்கெட் கீப்பிங் செய்தார். அந்த நிலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு அவசரமாக வந்த சாஹாஹா கால் சட்டையை தலைகீழாக அணிந்து கொண்டு களமிறங்கினார். இந்நிலையில் 2வது இன்னிங்ஸ் துவங்குவதற்கு முன்பாக சாப்பிட்டுக் கொண்டிருந்த தம்மை உடற்பயிற்சி மருத்துவர் சிகிச்சைக்காக அழைத்ததால் அவசரமாக சென்று மறந்த வாக்கில் கால் சட்டையை தலைகீழாக அணிந்து வந்ததாக ரிதிமான் சகா போட்டியின் முடிவில் தெரிவித்தார்.

அது பற்றி அவர் கேஎஸ் பரத் முதலில் பேசியது பின்வருமாறு. “அந்த இன்னிங்ஸ் துவங்குவதற்கு முன்பாக உங்களுக்கு ஊசி போடும் தேவை இருப்பதை நான் நடுவர்களிடம் தெரிவித்தேன். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத நடுவர்கள் என்னை தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்ய அனுமதிக்கவில்லை” என்று கூறினார். அதைத் தொடர்ந்து சஹா பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த சமயத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னிடம் வந்த உடற்பயிற்சியாளர் என்னுடைய சிறிய காயத்திற்கான மருந்துகளையும் ஊசியையும் போடுவதற்கு அழைத்தார். அந்த அவசரத்தில் தான் கால் சட்டையை நான் தவறுதலாக திருப்பி அணிந்து கொண்டேன். ஆனால் அதற்கிடையே நீங்கள் மிகச் சிறப்பான வேலையை செய்தீர்கள். மேலும் இந்த சீசனில் ஒவ்வொரு போட்டிக்கும் நான் ஒரே மாதிரியாக தயாராகி வருகிறேன். கடந்த போட்டியில் நான் 40 ரன்கள் அடித்தது போலவே ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக விளையாடினார்”

இதையும் படிங்க:IPL 2023 : தோனி பேட்டிங் செய்ய களமிறங்குவதை ஒருமுறையாவது நேரில் பாத்துடுங்க – ஆரோன் பின்ச் கருத்து

“அதே போல இந்த போட்டியிலும் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியை தொடர விரும்பினேன். குறிப்பாக இடைவெளிகளை பார்த்து அடிப்பது என்னுடைய பலமாகும்” என்று கூறினார். அப்படி இந்த சீசனில் அதிரடியாக விளையாடும் அவர் கேஎல் ராகுல் காயத்தால் விலகியதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு கடைசி நேரத்தில் தேர்வாகும் அளவுக்கு அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement