IPL 2023 : தோனி பேட்டிங் செய்ய களமிறங்குவதை ஒருமுறையாவது நேரில் பாத்துடுங்க – ஆரோன் பின்ச் கருத்து

Finch-and-Dhoni
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இந்த வருடம் 16-வது சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்ய உள்ளது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய இந்த ஐபிஎல் தொடரானது தற்போது மே மாதம் முதல் வாரத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 50-க்கும் மேலான லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள வேளையில் தற்போது இந்த தொடரானது பிளே ஆப் சுற்றினை நோக்கி நகர்ந்து சுவாரஸ்யமான கட்டத்தை எட்டவுள்ளது.

IPL-2023

- Advertisement -

இந்நிலையில் இந்த நடப்பு ஐ.பி.எல் தொடர் தான் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி தொடராக இருக்கும் என்பதனால் தோனி செல்லும் இடங்களில் எல்லாம் மஞ்சள் கொடி பறக்கிறது. அதோடு அவரை ஆதரித்து மைதானங்களில் பிரபலங்களின் படையெடுப்பும் இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக சென்னை சிஎஸ்கே அணியின் கோட்டை என்பதை தவிர்த்து இந்தியா முழுவதும் எந்த மைதானத்தில் தோனி விளையாடினாலும் மஞ்சள் நிறத்தில் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு தோனியின் மீது ரசிகர்கள் அன்பை பகிர்ந்து வருகின்றனர்.

Dhoni

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் தோனி களமிறங்கும் போது நேரலையில் கூறிய சில விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஆரோன் பின்ச் கூறியதாவது :

- Advertisement -

தோனி மைதானத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது அவருக்கு கிடைக்கும் வரவேற்பை போன்று நான் எந்த ஒரு வீரர் இறங்கும் போதும் எப்பொழுதுமே பார்த்தது கிடையாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் அவரை அன்புடன் வரவேற்கின்றனர்.

இதையும் படிங்க : PAK vs NZ : 48 மணி நேரத்தில் பாகிஸ்தானின் மகுடத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய நியூஸிலாந்து – பாக் ரசிகர்கள் சோகம்

அதோடு ஒரு கிரிக்கெட் ரசிகராக நீங்கள் இருந்தால் ஒரு முறையாவது தோனி பேட்டிங் செய்ய களத்திற்கு வரும்போது அதை நேரில் கண்டு களிக்க வேண்டும். ஏனெனில் அந்த அளவிற்கு அந்த தருணம் ஆகச்சிறந்த அனுபவம் என தோனி குறித்து ஆரோன் பின்ச் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement