WPL RCB : ஆடவர் டீமை மிஞ்சி முதல் கோப்பையை தூக்க வரும் வெறித்தனமான மகளிர் ஆர்சிபி அணி – மொத்த அணி விவரம் இதோ

RCB Women
- Advertisement -

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகும் மகளிர் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 4 முதல் 26 வரை முதல் முறையாக முழுமையாக பெரிய அளவில் நடைபெற உள்ளது. அதற்கான வீராங்கனைகள் ஏலம் பிப்ரவரி 13ஆம் தேதியான நேற்று மும்பையில் நடைபெற்றது. அந்த ஏலத்தில் ஏற்கனவே அணிகளை வாங்கிய மும்பை, டெல்லி, குஜராத், உத்திரபிரதேசம் மற்றும் பெங்களூரு ஆகிய 5 அணி நிர்வாகங்கள் பங்கேற்றன. மேலும் உலகம் முழுவதிலுமிருந்து 49 வீராங்கனைகள் பங்கேற்ற இந்த ஏலத்தில் இந்தியாவிலிருந்து 246 வீராங்கனைகள் களமிறங்கினர். அதை தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் முதல் வீராங்கனையாக வந்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனாவை வாங்குவதற்கு பல அணிகள் கடும் போட்டி போட்டன.

குறிப்பாக கடந்த 5 வருடங்களுக்கு மேலாக தனது அபார திறமையால் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து சாதனை மங்கையாக உருவெடுத்துள்ள அவரை வாங்குவதற்கு போட்டி போட்ட பல அணிகளுக்கு மத்தியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 3.4 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு வாங்கியது. அதன் வாயிலாக ஐபிஎல் மகளிர் தொடரில் அதிக தொகைக்கு விலை போன கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். மேலும் ஆடவர் அணி முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலியின் ஜெர்ஸி நம்பர் 18 கொண்ட இவரும் தங்களது அணியில் வாங்கப்பட்டுள்ளது பெங்களூரு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

- Advertisement -

வெறித்தனமான ஆர்சிபி:
அத்துடன் கடந்த வருடம் அறிமுகமாகி நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார் ரேணுகா சிங்கை 1.5 கோடிக்கு வாங்கிய பெங்களூரு அணி விக்கெட் கீப்பர் ரிச்சா கோஸை 1.9 கோடிக்கு வாங்கியது. இதில் ரேணுகா சிங் ஸ்விங் ராணி என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி. வரும் நிலையில் ரிச்சா கோஸ் அதிரடியாக பினிஷிங் செய்யும் திறமை கொண்டவராக அறியப்பட்டார்.

இவர்களை விட தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வீராங்கனையாக கருதப்படும் ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெரியை 1.7 கோடிக்கு வாங்கிய பெங்களூரு நியூசிலாந்து கேப்டன் சோஃபி டேவினை வெறும் 50 லட்சத்திற்கும் இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட்டை 40 லட்சத்திற்கும் வளைத்து போட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. மொத்தத்தில் முக்கிய இடங்களுக்கு தரமான வீராங்கனைகளை வாங்கியுள்ள பெங்களூரு அணி தங்களது ஆணிவேரை வலுவாக அமைத்துள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

சொல்லப்போனால் தற்சமயத்தில் எதிரணிகளை காட்டிலும் பெங்களூரு அணி தரமான வீராங்கனைகளை கொண்ட வலுவான அணியாக பார்க்கப்படுகிறது. அதனால் 2008 முதல் அனில் கும்ப்ளே, கெயில், டீ வில்லியர்ஸ், விராட் கோலி உள்ளிட்ட எத்தனையோ தரமான வீரர்கள் விளையாடியும் 15 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் ஆடவர் பெங்களூரு அணியை மிஞ்சி விரைவில் தங்களது மகளிர் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல போவதாக இப்போதே சமூக வலைதளங்களில் அந்த அணியை சேர்ந்த ரசிகர்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் பேசுவதை பார்க்க முடிகிறது.

இதையும் படிங்க: வீடியோ : ஹர்மன்ப்ரீத், மந்தனாவை கொண்டாடிய இந்திய அணியிணர் – கோடிகளை அள்ளிய டாப் இந்திய வீராங்கனைகளின் லிஸ்ட் இதோ

2023 ஐபிஎல் மகளிர் தொடரில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி இதோ:
ஸ்ம்ரிதி மந்தனா (3.4 கோடி) சோபி டேவின் (50 லட்சம்), எல்லிஸ் பெர்ரி (1.7 கோடி), ரேணுகா சிங் (1.5 கோடி), ரிச்சா கோஸ் (1.9 கோடி), எரின் பர்ன்ஸ் (30 லட்சம்), டிஷா கஷட் (10 லட்சம்), இந்திராணி ராய் (10 லட்சம்), ஷ்ரேயங்கா பாட்டில் (10 லட்சம்), கனிகா அகுஜா (35 லட்சம்), ஆஷா சோபனா (10 லட்சம்), ஹீதர் நைட் (40 லட்சம்), டேன் வன் நீக்கேர்க் (30 லட்சம்), ப்ரீதி போஸ் (30 லட்சம்), பூனம் கேம்னார் (10 லட்சம், கோமல் சன்சாத் (25 லட்சம்), மேகன் ஸ்கட் (40 லட்சம்), சஹானா பவார் (10 லட்சம்)

Advertisement