வீடியோ : ஹர்மன்ப்ரீத், மந்தனாவை கொண்டாடிய இந்திய அணியிணர் – கோடிகளை அள்ளிய டாப் இந்திய வீராங்கனைகளின் லிஸ்ட் இதோ

- Advertisement -

சர்வதேச ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியா கொடி கட்டி பறப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படும் ஐபிஎல் தொடரை மகளிர் கிரிக்கெட்டிலும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில வருடங்களாகவே வலுத்து வந்தது. ஏனெனில் கபில் தேவ் தலைமையில் 1983இல் இந்தியா ஆடவர் உலகக் கோப்பையை வென்ற சமயத்திலேயே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகள் மகளிர் கிரிக்கெட்டில் உலக கோப்பையை வென்று விட்டன. ஆனால் இன்னும் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா மட்டும் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது.

குறிப்பாக 90களில் சச்சினை மட்டும் நம்பிக்கொண்டு எப்படி ஆடவர் அணி இருந்ததோ அதே போல் இப்போதும் ஓரிரு வீராங்கனைகளை மட்டும் நம்பிக் கொண்டிருப்பதே இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தடுமாற்றத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதனால் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சமீப காலங்களில் மினி அளவில் நடத்தி வந்த மகளிர் ஐபிஎல் தொடரை இந்த வருடம் முழுமையாக பெரிய அளவில் நடத்துவதற்கு பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

- Advertisement -

கொண்டாடிய இந்திய அணி:
மேலும் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் மகளிர் அண்டர்-19 உலக கோப்பையை ஷபாலி வர்மா தலைமையில் இந்தியன் வென்றது மகளிர் கிரிக்கெட்டில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வெற்றியுடன் தற்போது மகளிர் ஐபிஎல் தொடரும் நடைபெறுவதால் விரைவில் இந்திய மகளிரணி புதிய உச்சங்களை அடையும் என்று உறுதியாக சொல்லலாம். அதைத்தொடர்ந்து வரும் மார்ச் 4 முதல் 26 வரை நடைபெறும் வரலாற்றின் முதல் மகளிர் ஐபிஎல் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் பிப்ரவரி 13ஆம் தேதியன்று மும்பையில் நடைபெற்றது.

அதில் ஏற்கனவே அணிகளை வாங்கிய மும்பை, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. மேலும் அந்த ஏலத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 409 வீராங்கனைகள் களமிறங்கினர். அதில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர இளம் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3.4 கோடி என்ற பெரிய தொகைக்கு பெங்களூரு அணிக்கு வாங்கப்பட்டார்.

- Advertisement -

அதே போல் மற்றொரு நட்சத்திரம் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 1.8 கோடிக்கு மும்பை அணிக்காக வாங்கப்பட்டார். அத்துடன் அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்ற ஷபாலி வர்மா டெல்லி அணிக்கு 2 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்த ஏலத்தை தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் 2023 மகளிர் உலக கோப்பையில் பங்கேற்று வரும் இந்திய அணியினர் தொலைக்காட்சி நேரடியாக பார்த்தனர்.

அப்போது ஒவ்வொரு 10 லட்சம் எகிற எகிற ஸ்ம்ரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் ஆகியோரை இதர வீராங்கனைகள் கைதட்டி கூச்சலிட்டு விசிலடித்து கொண்டாடியதுடன் இறுதியில் பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட போது கட்டிப்பிடித்து கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்த ஏலத்தில் எலிஸ் பெரி போன்ற நட்சத்திர வெளிநாட்டு வீராங்கனைகளும் பெரிய கோடிகளுக்கு விலை போனார்கள்.

- Advertisement -

இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போன டாப் 10 வீராங்கனைகளில் 7 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது இந்திய ரசிகர்களை பெருமைப்பட வைக்கும் அம்சமாகும். சரி இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போன இந்திய வீராங்கனைகளைப் பற்றி பார்ப்போம்:
1. ஸ்ருதி மந்தனா : ஆர்சிபி – 3.4 கோடி
2. தீப்தி சர்மா : யூபி வாரியர்ஸ் – 2.6 கோடி
3. ஜெமிமா ரோட்டரிக்கர்ஸ் : டெல்லி கேப்பிட்டல்ஸ் – 2.2 கோடி
4. ஷபாலி வர்மா : டெல்லி கேப்பிடல்ஸ் – 2 கோடி
5. பூஜா வஸ்திரகர் : மும்பை இந்தியன்ஸ் – 1.9 கோடி
6. ரிச்சா கோஸ் : ஆர்சிபி – 1.9 கோடி
7. ஹர்மன்பிரீத் கௌர் : மும்பை இந்தியன்ஸ் – 1.8 கோடி

இதையும் படிங்க: அது தான் தோனியின் தரம், நாங்க இல்லனா அந்த ஜாம்பவான் 2007லேயே ரிட்டையர் ஆகிருப்பாரு – கேரி கிறிஸ்டன் பேட்டி

8. ரேணுகா சிங் : ஆர்சிபி – 1.5 கோடி
9. யாஸ்டிகா பாட்டியா : மும்பை இந்தியன்ஸ் – 1.5 கோடி
10. தேவிகா வைத்யா : யூபி வாரியர்ஸ் 1.4 கோடி
11. ஸ்னே ராணா : குஜராத் ஜெயன்ட்ஸ் – 75 லட்சம்
12. சிகா பாண்டே : டெல்லி கேபிட்டல்ஸ் – 75 லட்சம்
13. ராஜேஸ்வரி கைக்வாத் : யூபி வாரியர்ஸ் – 40 லட்சம்
14. ஹர்லீன் தியோல் : குஜராத் ஜெயின்ஸ் – 40 லட்சம்
15. ராதா யாதவ் : டெல்லி கேபிட்டல்ஸ் – 40 லட்சம்
16. அஞ்சலி சர்வணி : யூபி வாரியர்ஸ் – 30 லட்சம்

Advertisement