இப்போதுள்ள ஃபார்முக்கு அவர் 2024 டி20 உ.கோ இந்திய அணியில் செலக்ட்டான ஆச்சர்யப்படாதீங்க.. வாசிம் ஜாபர்

Wasim Jaffer
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களுடைய முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள அந்த அணி சிறப்பாக விளையாடி வருகிறது. எனவே 2018க்குப்பின் 16 வருடங்கள் கழித்து இம்முறை ராஜஸ்தான் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இம்முறை அந்த அணிக்கு பேட்டிங் துறையில் இளம் வீரர் ரியன் பராக் அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். ஏனெனில் 2019 முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் அவர் 5 வருடங்களில் வெறும் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்தார். அதனால் இவர் ஐபிஎல் தொடருக்கு செட்டாக மாட்டார் என்ற விமர்சனங்களும் கிண்டல்களும் எழுந்தன.

- Advertisement -

உலகக் கோப்பை வாய்ப்பு:
ஆனால் இம்முறை ஆரம்பம் முதலே எதிரணிகளை பந்தாடி வரும் அவர் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 261 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். அதனால் விராட் கோலிக்கு பின் ஆரஞ்சு தொப்பி பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்து அசத்தி வரும் அவர் தன் மீதான விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் தற்போதுள்ள ஃபார்முக்கு 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ரியன் பராக் தேர்வு செய்யப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என முன்னாள் வீரர் வாஷிம் ஜாஃபர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வருட ஐபிஎல் தொடரில் ரியான் பராக் வளர்ந்து வரும் வீரராக செயல்பட்டு வருகிறார். ஒரு இளம் வீரர் இப்படி செயல்படுவதை பார்ப்பது புத்துணர்ச்சியாக இருக்கிறது”

- Advertisement -

“உள்ளூர் தொடரில் அசாம் அணிக்காக இந்த வருடம் சிறப்பாக செயல்பட்ட அவர் அதே ஃபார்மை ஐபிஎல் தொடரில் பயன்படுத்துகிறார். 4வது இடம் அவருக்கு நன்றாக பொருந்துகிறது. அவருடைய கடின உழைப்பு தற்போது தெரிகிறது. மிகவும் ஃபிட்டாக இருக்கும் அவர் அமைதியாக செயல்படுகிறார். கடந்த சில வருடங்களாக நிறைய கிண்டல்களை சந்தித்த அவருடைய ஷாட் செலக்சன் நன்றாக இருக்கிறது”

இதையும் படிங்க: அவங்க 2 பேரும் எங்களிடம் இருந்து வெற்றியை பறிச்சிட்டு போய்ட்டாங்க.. தோல்விக்கு பின்னர் – கே.எல் வருத்தம்

“இதற்கு முன் ஃபினிஷர் எனும் கடினமான வேலையை செய்த அவர் மீது ராஜஸ்தான் நிர்வாகம் தொடர்ந்து நம்பிக்கை வைத்தது. இப்போது 4வது இடத்தில் அசத்தும் அவர் எல்லோரையும் தவறு என்று நிரூபிப்பதில் அர்ப்பணிப்புடன் விளையாடுகிறார். தற்போதைய ஃபார்மை பார்க்கும் போது அவரை டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாளர்கள் பரிசீலித்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று கூறினார்.

Advertisement