அவங்க 2 பேரும் எங்களிடம் இருந்து வெற்றியை பறிச்சிட்டு போய்ட்டாங்க.. தோல்விக்கு பின்னர் – கே.எல் வருத்தம்

KL-Rahul
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26-ஆவது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குறித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 55 ரன்களையும், கே.எல் ராகுல் 39 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது 18.1 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி சார்பாக அறிமுக வீரர் ஜாக் பிரேசர் 55 ரன்களையும், ரிஷப் பண்ட் 41 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேட்டியளித்த கே.எல் ராகுல் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். நல்ல துவக்கம் இருந்தும் எங்களால் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் போனது. 180 ரன்கள் வரை அடித்திருந்தால் வெற்றிக்கு போதுமான ஸ்கோராக இருந்திருக்கும்.

- Advertisement -

இந்த மைதானத்தில் உள்ள தன்மையை பயன்படுத்தி குல்தீப் யாதவ் எங்கள் அணியின் முக்கிய வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்க வைத்து விட்டார். அதேபோன்று டெல்லி அணி சார்பாக ஜாக் பிரேசர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அனைத்து பந்திகளையும் அவர் அடித்து ஆடவே நினைத்தார். அவரது இந்த இன்னிங்ஸ் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இதையும் படிங்க : இதுக்காக ரிஷப் பண்ட்க்கு அபராதம் போடனும்.. ஆடம் கில்கிறிஸ்ட் அதிருப்தி விமர்சனம்.. காரணம் என்ன?

அதேபோன்று பவர்பிளேவிலேயே வார்னர் விக்கெட்டை நாங்கள் வீழ்த்தி விட்டோம். மேலும் பவர்பிளேவிற்கு பிறகு இரண்டாவது விக்கெட்டையும் வீழ்த்தி விட்டோம். ஆனால் ரிஷப் பண்ட் மற்றும் ஜாக் பிரேசர் ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்தனர். ஜேக் பிரேசர் கேட்சை தவறவிட்டது பெரிய இழப்பாக மாறியது என தோல்வி குறித்து கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement