அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் ! சென்னை, மும்பை பெயரில் மாஸ் பெண்கள் அணிகள் – முழு விவரம் இதோ

Women's IPL
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தயாராகி உள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. மும்பை, புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரை பார்ப்பதற்கு 25% ரசிகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

மகளிர் ஐபிஎல் கோரிக்கை:
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் முறையாக 8 அணிகளுடன் தோற்றுவிக்கப்பட்ட ஐபிஎல் தொடர் இன்று 10 அணிகள் விளையாடும் அளவுக்கு பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு வரும் இந்த தொடர் பணத்திலும் தரத்திலும் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டு இன்று உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நம்பர் 1 டி20 தொடராக இமயத்தின் உச்சத்தை எட்டியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக இந்த வருடம் லக்னோ 7000+ கோடி மற்றும் குஜராத் 5000+ கோடி என புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டதால் 12,000 கோடிக்கும் மேலான வருமானத்தை பிசிசிஐ பெற்றது. மேலும் இந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆரஞ்சு, ஊதா தொப்பிகளுக்கு ஸ்பான்சர்ஷிப்பை அறிவித்த பிசிசிஐ வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஐபிஎல் சீசனில் ஸ்பான்சர்ஷிப் வாயிலாக மட்டும் 1000 கோடி வருமானம் என்ற புதிய சாதனை படைத்துள்ளது. இப்படி கோடி கோடியாய் குவித்த போதிலும் மகளிர் ஐபிஎல் தொடர் மீது ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த பிசிசிஐயிடம் பெண்கள் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது.

2023 முதல் மீண்டும் மகளிர் ஐபிஎல்:
ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் மகளிர் பிக் பேஷ் போன்ற தொடர்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக அந்த நாடுகளின் மகளிர் கிரிக்கெட்டும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. மறுபுறம் இந்தியாவில் அதுபோன்ற ஒரு தொடர் நடத்தப்படாமல் இருப்பதால் இந்திய மகளிர் அணிக்கு நிறைய இளம் வீராங்கனைகள் கிடைக்காமல் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா இன்னும் தரம் உயராமல் இருந்து வருகிறது.

- Advertisement -

எப்படியென்றால் ஆஸ்திரேலிய மகளிர் அணி இதுவரை 6 உலகக் கோப்பைகள், இங்கிலாந்து மகளிர் அணி இதுவரை 4 உலக கோப்பைகளை வென்றுள்ள நிலையில் இந்திய மகளிர் அணி மட்டும் இதுவரை ஒரு உலக கோப்பையை கூட வென்றதில்லை. அந்த அளவுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அதலபாதாளத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் கடந்த 2018 – 2020 வரை 3 அணிகள் கொண்ட மகளிர் ஐபிஎல் தொடரை நடத்தி வந்த பிசிசிஐ அது பெரிய அளவில் வெற்றி பெறாத காரணத்தால் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. இந்நிலையில் அந்த தொடரை மீண்டும் நடத்த வேண்டும் என தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டு வந்த நிலையில் அதை ஏற்றுக் கொண்டுள்ள பிசிசிஐ வரும் 2023 முதல் மீண்டும் மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

6 அணிகள் :
இது பற்றி மார்ச் 25-ஆம் தேதி நடந்த பிசிசிஐ தலைமை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வருடங்களில் 3 அணிகளாக இருந்த மகளிர் ஐபிஎல் புதிதாக தொடங்கும் போது 6 அணிகள் கொண்ட தொடராக நடத்தப்பட உள்ளது. இந்த 6 அணிகளை வாங்குவதற்கு ஏற்கனவே ஆடவர் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற பழைய அணிகளுக்கு முதல் முன்னுரிமை அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இதற்கு முன்னோட்டமாக இந்த வருடம் ஐபிஎல் தொடரின் இறுதி நாட்களில் ஒருசில போட்டிகளை கொண்ட மகளிர் ஐபிஎல் நடைபெறும் எனவும் தெரியவருகிறது. இதில் ஒரு சில வெளிநாட்டு வீராங்கனைகளும் பங்கு பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான தேதிகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியால் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் மற்றும் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் கொடுத்த புகாரால் வேலையை இழந்த ராஜஸ்தான் அணி நிர்வாகி- ஸ்ட்ரிக்ட் நடவடிக்கை

ஏனெனில் இது போன்ற ஒரு தொடரால் பல இளம் இந்திய வீராங்கனைகள் வாழ்வாதாரத்தை பெறுவார்கள். அத்துடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் பல தரமான வீராங்கனைகள் கிடைக்கும் என்பதால் சர்வதேச அரங்கில் இந்திய மகளிர் அணியால் சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement