ஐபிஎல் போட்டியில் பாலியல் தொல்லை…இளம்பெண் போலீஸில் புகார்…! – எங்க தெரியுமா ?

prity

ஐபிஎல் போட்டியின் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீஸார் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
delhi

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. போட்டியின் போது மைதானத்தில் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் மும்பை போலீஸில் புகார் அளித்தனர்.

புகார் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் மும்பை வான்கடே மைதானத்தில் ஒப்பந்ததாரராகப் பணியாற்றி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், அவரை 2 நாள்கள் கஸ்டடியில் எடுத்தனர். அவர் குறித்த தகவல்களை போலீஸார் வெளியிடவில்லை. வான்கடே மைதானத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கர் ஸ்டேண்ட் அருகே இந்த சம்பவம் நடந்ததாகப் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
mumbai

- Advertisement -

உலகின் பிரபலமான கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் தொடரின்போது பாலியல் புகார்கள் எழுவது இது முதல்முறையல்ல. பிரபல தொழிலதிபரான நெஸ் வாடியா, தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரும், நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா கடந்த 2014-ல் போலீஸில் புகார் அளித்தார். மும்பை வான்கடே மைதானத்தில் 2014-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி நடைபெற்ற போட்டியின் போது நெஸ் வாடியா, தனது கையைப் பிடித்து இழுத்ததாக, ப்ரீத்தி ஜிந்தா புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement