IPL 2023 : சின்ன தல இல்லாம இதுதான் முதல்முறை. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரிதான நிகழ்வு – விவரம் இதோ

Raina
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

CSK Ms DHoni

- Advertisement -

அதன்படி தற்போது சென்னை அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டி சுமார் 1426 நாட்களுக்குப் பின்னர் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் தமிழக ரசிகர்கள் அனைவரும் மஞ்சள் நிற ஜெர்சியுடன் மைதானத்தை முகாமிட்டுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே சென்னை மைதானத்தில் போட்டிகள் நடைபெறாமல் இருந்த வேளையில் தற்போது மீண்டும் அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடுவதால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழக ரசிகர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மைதானத்தில் போட்டிகள் நடைபெறுவதால் பெரும் பொற்சாகம் அடைந்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய சென்னை அணியானது அதன் பின் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவே இல்லை. தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற்று வரும் வேளையில் இந்த போட்டிக்கான சென்னை அணியில் முதல்முறையாக சுரேஷ் ரெய்னா சேப்பாக்கம் மைதானத்தில் இல்லாமல் சிஎஸ்கே அணி களம் இறங்கியுள்ளது.

- Advertisement -

அதேபோன்று கடந்த மூன்று சீசன்களாக சென்னை அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும், அடுத்த கேப்டனாகவும் பார்க்கப்படும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு சேப்பாக்கத்தில் இதில் முதல் போட்டியாகவும் இருக்கிறது.

இதையும் படிங்க : IPL 2023 : அவருக்கு ஏன் இந்திய அணியில் சான்ஸ் கிடைக்கலன்னு புரியல, தோனிக்கு அப்றம் அவர் தான் தகுதியான கேப்டன் – சேவாக் பாராட்டு

இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் நான்கு முறை கோப்பையை வென்ற போது சென்னை அணியில் தோனிக்கு அடுத்து மற்றொரு தூணாக பார்க்கப்படும் சுரேஷ் ரெய்னா இல்லாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement