IPL 2023 : அவருக்கு ஏன் இந்திய அணியில் சான்ஸ் கிடைக்கலன்னு புரியல, தோனிக்கு அப்றம் அவர் தான் தகுதியான கேப்டன் – சேவாக் பாராட்டு

Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 3ஆம் தேதியன்று நடைபெறும் 6வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் சென்னை கடந்த வருடம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை மட்டுமே பிடித்த நிலையில் இந்த வருடம் சிறப்பாக செயல்பட்டு 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. இருப்பினும் குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் போராடி தோல்வியை சந்தித்த சென்னை இந்த போட்டியில் வென்று வெற்றி பாதைக்கு திரும்பும் முயற்சியுடன் போராட உள்ளது. குறிப்பாக 2019க்குப்பின் தன்னுடைய கோட்டையான சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுவதால் சென்னை வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Ruturaj Gaikwad CSk

- Advertisement -

முன்னதாக அகமதாபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு 92 (50) ரன்களை விளாசிய ருதுராஜ் கைக்வாட் அதிரடியாக விளையாடிய போதிலும் இதர பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இருப்பினும் எப்போதும் சற்று பொறுமையுடன் விளையாடக்கூடிய ருதுராஜ் அந்த போட்டியில் கொஞ்சமும் தடுமாறாமல் வழக்கத்திற்கு மாறாக 4 பவுண்டரியும் 9 மெகா சிக்சர்களையும் பறக்க விட்டு அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அடுத்த கேப்டன்:
மேலும் 2020, 2021, 2022 சீசன்களில் தன்னுடைய முதல் 3 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான அவர் இந்த சீசனின் முதல் போட்டியிலேயே பெரிய ரன்களை குவித்து அதிரடி வேட்டையை துவக்கியுள்ளது சென்னைக்கு பலமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2021 சீசனில் 635 ரன்களை குவித்த அவர் ஆரஞ்சு தொப்பியை வென்று சென்னை 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். அந்த வகையில் பெரிய ரன்களை குவித்து துருப்புச் சீட்டாக செயல்படும் திறமை கொண்ட ருதுராஜ் கைக்வாட் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்புகளை பெறாதது தமக்கு ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் விரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.

Ruturaj

மேலும் எம்எஸ் தோனிக்கு அடுத்ததாக சென்னையை வழி நடத்தும் தகுதியான கேப்டனாகவும் அவர் காட்சியளிப்பதாக தெரிவிக்கும் சேவாக் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “பெரும்பாலும் அரை சதங்கள் அடிப்பது பெரிய விஷயமல்ல. அதை சதமாக மாற்றுவது தான் முக்கியமாகும். அந்த வகையில் சென்னை அணிக்காக கடந்த 2 சீசனுக்கு முன்பு நிறைய ரன்களை அடித்த போது அவர் சதமும் அடித்திருந்தார். ஆனாலும் அவருக்கு இந்திய அணியில் விளையாட மேற்கொண்டு வாய்ப்புகள் கிடைக்காதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது”

- Advertisement -

“ஒருவேளை வாய்ப்பு பெற்ற இதர வீரர்கள் சிறப்பாக செயல்படுவதால் அவர் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கலாம். எனவே இந்த சீசனில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு வெகு தொலைவில் இல்லை. அத்துடன் எம்எஸ் தோனிக்கு அடுத்தபடியாக சென்னை அணியை வழி நடத்தும் தகுதியும் ருதுராஜ்க்கு இருப்பதாக நான் உணர்கிறேன்” என்று கூறினார்.

Sehwag

முன்னதாக 2021 சீசனில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தால் இலங்கை சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமாகி மொத்தமாக 10 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் 1 அரை சதம் உட்பட 135 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்படி முதல் முயற்சியில் பெரும்பாலான வீரர்களை போல் தடுமாற்றமாக செயல்பட்ட காரணத்தால் கழற்றி விடப்பட்ட அவருக்கு மீண்டும் இந்திய அணி நிர்வாகம் 2வது வாய்ப்பு கொடுக்காமல் பெஞ்சில் அமர வைத்து வருகிறது. எனவே இந்த சீசனில் பெரிய ரன்களை குவிக்கும் பட்சத்தில் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு அவரை தேடி வரும் என்று சேவாக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:இந்தியாவுக்காக என்னை கடவுள் விளையாட வெச்ச அந்த மாதிரி இன்னிங்ஸை இனி நானே நினைச்சாலும் ஆட முடியாது – விராட் கோலி

அத்துடன் ஏற்கனவே உள்ளூர் கிரிக்கெட்டில் மகாராஷ்டிரா அணிக்காக சயீத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை போன்ற தொடர்களில் கேப்டனாக செயல்பட்டு பெரிய ரன்களை குவித்த அனுபவம் கொண்ட அவரிடம் இளமையும் திறமையும் இருப்பதால் தோனிக்கு பின் நீண்ட காலம் சென்னையை வழி நடத்தும் தகுதியும் இருக்கிறது என்றே சொல்லலாம்.

Advertisement