இந்தியாவுக்காக என்னை கடவுள் விளையாட வெச்ச அந்த மாதிரி இன்னிங்ஸை இனி நானே நினைச்சாலும் ஆட முடியாது – விராட் கோலி

Virat Kohli
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 10 வருடங்களில் எத்தனையோ தரமான இன்னிங்ஸ் விளையாடியிருந்தாலும் 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிய இன்னிங்ஸ் யாராலுமே மறக்க முடியாது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 159/8 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், உச்சகட்ட பார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியா 2021 டி20 உலக கோப்பை போல மீண்டும் பரம எதிரி பாகிஸ்தானிடம் தோல்வியை சந்திப்பது உறுதியென இந்திய ரசிகர்கள் கவலையடைந்தனர்.

Virat Kohli Rohit Sharma

- Advertisement -

ஆனால் அப்போது நங்கூரத்தை போட்ட விராட் கோலி அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் ரன்களை சேர்த்தார். குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த விமர்சனங்களை 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதமடித்து ஃபார்முக்கு திரும்பியிருந்த அவர் அதை கச்சிதமாக பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார். இருப்பினும் அவருடன் 5வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய பாண்டியா கடைசி நேரத்தில் ஆட்டமிழந்ததார்.

கடவுள் இன்னிங்ஸ்:
அப்போது கடைசி 8 பந்தில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது ஹாரீஸ் ரவூப் வீசிய 19வது ஓவரில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்ட விராட் கோலி 6 பவுண்டரி 4 சிக்சருடன் 82* (53) ரன்கள் குவித்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் சொதப்பியும் கடைசி பந்தில் அஸ்வின் இந்தியாவின் சரித்திர வெற்றியை பினிஷிங் செய்தார். மொத்தத்தில் அன்றைய நாளில் வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி 19வது ஓவரில் ஹாரீஸ் ரவூப்க்கு எதிராக எப்படி நேராக பின்னங்காலில் நின்று சிக்சர் அடித்தார் என்பதை இப்போதும் பல வல்லுனர்களுக்கு புரியவில்லை.

இந்நிலையில் அன்றைய நாளில் ஒரு கட்டத்திற்கு பின் அதிகப்படியான அழுத்தத்தால் என்ன செய்வதென்று தெரியாமலேயே விளையாடிய தன்னை தம்மையும் மிஞ்சிய கடவுள் போன்ற சக்தி விளையாட வைத்ததாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். குறிப்பாக தண்ணீர் இடைவேளையில் ராகுல் டிராவிட் என்ன பேசினார் என்பது காதுகளில் விழவில்லை என்று தெரிவிக்கும் அவர் அது போன்ற இன்னிங்ஸ் இனி தாம் நினைத்தாலும் விளையாட முடியாது என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இப்போதும் என்னால் அதை உணர முடியவில்லை என்பதே நேர்மையான கருத்தாகும். அன்றைய நாளில் நீங்கள் என்ன நினைத்தீர்கள்? எப்படி திட்டமிட்டார்கள்? என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். அதற்கான பதில் என்னிடம் இல்லை. ஏனெனில் 12 – 13வது ஓவரில் எனது மனம் முடக்கப்பட்டதால் நான் மிகவும் அழுத்தத்தில் இருந்தேன். மேலும் மோசமான காலத்தை கடந்து ஆசிய கோப்பையில் பார்முக்கு திரும்பி அன்றைய நாளில் விளையாடிய என்னால் இந்த உலகக் கோப்பையில் அசத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது”

Kohli Press

“குறிப்பாக 10வது ஓவரில் நாங்கள் 31/4 என தடுமாறிய போது அக்சர் பட்டேலை நான் ரன் அவுட் செய்தேன். அப்போது நான் 25 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்தேன். அந்த சமயத்தில் வந்த ராகுல் டிராவிட் ஏதோ சொன்னார் ஆனால் அது எனக்கு நினைவில்லை. அதனால் தண்ணீர் இடைவெளியில் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை ஏனெனில் நான் வெளியில் இருந்தேன் என்று டிராவிட்டிடம் சொன்னேன். அந்த சமயத்தில் எனது மனம் வேகமாக சுழன்றது”

- Advertisement -

“அங்கிருந்து நம்மால் கம்பேக் கொடுக்க முடியாது என்று நான் நினைத்தேன். அப்போது தான் என் உள்ளுணர்வு தலை தூக்கியது. எனவே நான் சிந்தித்து திட்டமிடுவதை நிறுத்திய போது கடவுள் கொடுத்த திறமை என்னவோ அது மேலோட்டமாக வந்தது. பின்னர் என்னை மிஞ்சிய ஏதோ உயர்ந்த ஒன்று என்னை வழி நடத்துவது போல் உணர்ந்தேன். எனவே அதற்கான எந்த பாராட்டுகளையும் நான் கேட்கவில்லை”

VIrat Kohli IND vs PAK

இதையும் படிங்க:IPL 2023 : அவர் பேட்டிங் செய்வதை என் குழந்தைகளை கூப்பிட்டு பாக்க சொல்வேன் – இந்திய வீரரை ஓப்பனாக பாராட்டும் மைக்கேல் வாகன்

“இருப்பினும் தேவையின்றி யோசிப்பதை நீங்கள் நிறுத்தினால் உண்மையான மேஜிக் நடைபெறும் என்று அன்றைய நாளில் பாடத்தை கற்றுக் கொண்டேன். அன்றைய இரவில் நடந்ததை என்னால் எப்போதும் விவரிக்கவும் முடியாது. அது எப்போதும் மீண்டும் நடக்காது” என்று கூறினார்.

Advertisement