IPL 2023 : அவர் பேட்டிங் செய்வதை என் குழந்தைகளை கூப்பிட்டு பாக்க சொல்வேன் – இந்திய வீரரை ஓப்பனாக பாராட்டும் மைக்கேல் வாகன்

Vaughan
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று நடைபெற்ற 5வது லீக் போட்டியில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தங்களுடைய கனவு முதல் கோப்பையை முத்தமிடும் பயணத்தை இந்த சீசனில் மீண்டும் வெற்றியுடன் துவக்கியுள்ளது. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொதப்பியதால் 48/4 என தடுமாறினாலும் இளம் வீரர் திலக் வர்மா அதிரடியாக 84* (46) ரன்கள் குவித்த உதவியுடன் 20 ஓவர்களில் 171/7 ரன்கள் சேர்த்தது.

Maxwell

ஆனால் அதைத் துரத்திய பெங்களூருவுக்கு சுமாராக பந்து வீசிய மும்பை பவுலர்களை அடித்து நொறுக்கி 148 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய கேப்டன் டு பிளஸ்ஸில் 73 (43) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 82* (49) ரன்களும் விளாசி 16.2 ஓவரிலேயே அதிரடியான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற தரமான பவுலர்களை அற்புதமாக எதிர்கொண்டு ரசிகர்களை மகிழ்வித்த விராட் கோலி 6 பவுண்டரி 5 சிக்சருடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

குழந்தைகள் பார்ப்பாங்க:
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர், ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ள அவர் 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறியதால் கடந்த 2022 சீசனில் அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாகி சுமாராக செயல்பட்டார். இருப்பினும் கடந்த ஆசிய கோப்பையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து சமீபத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்து ஃபார்முக்கு திரும்பியுள்ள அவர் இந்த சீசனில் முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடிய வெற்றி பெற வைத்துள்ளதால் இம்முறை கேப்டன்ஷிப் அழுத்தமும் இல்லாமல் இதே போல் சிறப்பாக விளையாடி தங்களுக்கு முதல் கோப்பையை வென்று கொடுப்பார் என்ற நம்பிக்கை பெங்களூரு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Virat Kohli vs Jofra Archer

இந்நிலையில் விராட் கோலி போன்ற மகத்தான ஒருவர் பேட்டிங் செய்யும் போது தன்னுடைய குழந்தைகள் எங்கிருந்தாலும் அவர்களை கூப்பிட்டு அதை பார்க்க சொல்வேன் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி பேட்டிங் செய்யும் போதெல்லாம் நான் எப்போதும் என்னுடைய குழந்தைகள் இருக்கும் அறை கதவுகளை தட்டுவேன்”

- Advertisement -

“பொதுவாக என்னுடைய குழந்தைகள் எங்களுடைய பெட்ரூமில் லேப்டாப் சாதனங்களை பயன்படுத்தி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது அதை விட்டு விட்டு இதை வந்து அவரை பாருங்கள் என்று என்னுடைய குழந்தைகளிடம் தெரிவிப்பேன். ஏனெனில் என்னை பொறுத்த வரை விராட் கோலி இப்போதும் இப்படி விளையாடும் போதெல்லாம் உலகிலேயே பார்ப்பதற்கு மிகச்சிறந்த வீரராக இருக்கிறார். அவர் பேட்டிங்கை மிகவும் எளிமையாக காட்சிப்படுத்துகிறார்”

vaughan

“அவருடைய சில ஷாட்கள், பேலன்ஸ், டைமிங், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் நேராகவும் அடிக்கும் டெக்னிக், ஓவர் எக்ஸ்ட்ரா கவர் திசையில், இடுப்பளவு வரும் பந்தை பிளிக் ஷாட் அடித்து சிக்ஸராக பறக்க விடுவது, மிட் விக்கெட் திசையில் இறங்கி வந்து அதிரடியாக அடிப்பது போன்ற அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகும்” என்று கூறினார். அதே போல் 38 வயதிலும் ஃபீல்டிங் செய்வதில் 25 வயது இளம் வீரரை போல் டு பிளேஸிஸ் அசத்துவதாக பாராட்டும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:IPL 2023 : மும்பை, சென்னைக்கு குறைஞ்சவங்க இல்ல, நாங்களும் அந்த சாதனை செஞ்சுருக்கோம் – ஆர்சிபி கிண்டல்களுக்கு விராட் பதிலடி

“பஃப் 38 வயதை நிரம்பியவர் என்று நினைக்கிறேன். ஆனால் அவருடைய உடல் இன்னும் 25 வயதுக்கு நிகராக இருக்கிறது. ஃபிட்டாக இருக்கும் அவர் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் நகர்ந்து சிறப்பாக ஃபீல்டிங் செய்வதை நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். மிகச் சிறந்த வீரரான அவரும் வலது கை பேட்ஸ்மேனாக ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவர்” என்று கூறினார்.

Advertisement