அந்த விஷயத்தை ஒத்துக்கிறேன்.. தோனி இருந்த வரை வேற லெவல் பண்ணோம்.. குல்தீப் யாதவ் வெளிப்படை

Kuldeep Yadav ms dhoni
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நிகராக குல்தீப் யாதவ் அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். கடந்த 2016இல் அறிமுகமான அவர் அதே காலகட்டத்தில் யுஸ்வேந்திர சஹாலுடன் சேர்ந்து குறுகிய காலத்திலேயே முதன்மை ஸ்பின்னராகவும் உருவெடுத்தார். அதனால் அஸ்வின் மற்றும் ஜடேஜாவை ஆகியோரை பின்னுக்குத் தள்ளிய சஹால் – குல்தீப் ஆகியோர் ஜோடியாக 2017 சாம்பியன்ஸ் டிராபி 2019 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடினார்கள்.

இருப்பினும் அதன் பின் தடுமாறிய அந்த இருவருமே ரன்களை வாரி வழங்கியதால் 2021 டி20 உலகக் கோப்பையில் கழற்றி விடப்பட்டனர். குறிப்பாக குல்தீப் யாதவ் ஐபிஎல் தொடரில் சரமாரியாக அடி வாங்கியதால் கொல்கத்தா அணியில் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் மீண்டும் தற்போது சிறப்பாக விளையாடி இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

தோனி இருந்தப்போ:
ஆனாலும் 2019 உலகக் கோப்பைக்கு பின் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் இந்திய அணியில் இடத்தை இழந்ததற்கு முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் ஓய்வு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்கிய போதெல்லாம் தோனி அவர்களுடைய அருகே சென்று எப்படி பந்து வீச வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தார்.

அத்துடன் விராட் கோலி கேப்டனாக இருந்தாலும் விக்கெட் எடுப்பதற்கு தேவையான சிறந்த ஃபீல்டிங்கை அவர்களுக்கு கேட்காமலேயே தோனி செட்டிங் செய்து கொடுத்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில் தோனி இல்லாததால் தம்முடைய செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டது என்பது உண்மை தான் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் தோனி இன்னும் விளையாட வேண்டும் என்று விரும்பினேன். ஏனெனில் அவர் இருந்தால் எங்களுக்கு பந்து வீசுவது எளிதாக இருக்கும். தோனி ஓய்வுக்குப் பின் பந்து வீச்சில் என்னுடைய செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. உங்களை வழி நடத்தும் ஒருவர் அங்கே இல்லாமல் போனால் திடீரென அனைத்தும் உங்களுடைய தோள் மீது பாரமாகி விடும் என்பதால் அப்படி நடக்கும். எனவே எனக்கு என்ன நடந்தது என்பதை புரிந்துக்கொள்ள நேரம் தேவைப்படும்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : சிஎஸ்கே – ஆர்சிபி மேட்ச் டிக்கெட் விலை? ஆன்லைனில் எப்படி வாங்க முடியும்? வெளியான அறிவிப்பு

“பின்னர் அதைப் புரிந்து கொண்டு சுயமாக தன்னம்பிக்கை பெறுகிறீர்கள். ஆனால் தோனி பாய் கீப்பிங் செய்த போது நானும் சஹாலும் மகிழ்ச்சியுடன் பந்து வீசினோம். அவர் எங்களுக்கு நிறைய ஐடியா கொடுப்பார் என்பதால் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. அவர் ஃபீல்டிங்கை மாற்றிக் கொடுப்பார் என்பதால் பந்து வீசுவது மட்டுமே எங்களுடைய வேலை. எனவே களத்திலும் களத்திற்கு வெளியேயும் தோனி பாயுடன் நான் இருந்த நேரங்கள் மகத்தானது என்பதில் சந்தேகமில்லை” என்று கூறினார்.

Advertisement