ஐபிஎல் 2024 : சிஎஸ்கே – ஆர்சிபி மேட்ச் டிக்கெட் விலை? ஆன்லைனில் எப்படி வாங்க முடியும்? வெளியான அறிவிப்பு

CSk vs RCB Tickets
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் ஐபிஎல் 2024 டி20 தொடர் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. இம்முறை தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் துவங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் சென்னை முதல் போட்டியிலேயே பெங்களூருவை தோற்கடித்து கோப்பையை தக்க வைக்கும் பயணத்தை வெற்றியுடன் துவக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

குறிப்பாக ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி தற்போது 41 வயதை கடந்து விட்டதால் இந்த தொடருடன் ஓய்வு பெறுவார் என்ற செய்திகளும் எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. எனவே அவருடைய தலைமையில் இந்த வருடம் சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை பார்ப்பதற்காக சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

வெளியான அறிவிப்பு:
இம்முறை ரசிகர்கள் நீண்ட தூரம் வரிசையில் நின்று அவஸ்தையை சந்திப்பதை தவிர்ப்பதற்காக ஆன்லைன் முறையில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி மார்ச் 18 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை – பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் துவங்கும்.

அதை ரசிகர்கள் பேடிஎம் மற்றும் இன்சைடர் டாட் இன் ஆகிய இணையதளத்தில் வாங்க முடியும். சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள சி, டி, ஈ லோயர் தளங்களுக்கான டிக்கெட் விலை 1700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள ஐ,ஜே,கே அப்பர் தளத்திற்கு 4000 ரூபாய் டிக்கெட் விலையாகவும் ஐ,ஜே,கே லோயர் தளத்திற்கு 4,500 ரூபாய் டிக்கெட் வெளியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து சி, டி, ஈ அப்பர் தளத்திற்கு 4000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கேஎம்கே மாடி தளத்திற்கு அதிகபட்சமாக 7500 டிக்கெட் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முறையில் ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 டிக்கெட்டுகள் மட்டுமே கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுகப் போட்டிக்கு இந்த டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்கள் மாலை 4.30 மணிக்கு மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதையும் படிங்க: ஏலத்துல எடுக்கலானா என்ன? 2024 ஐ.பி.எல் தொடருக்காக புதிய அவதாரம் எடுத்த ஸ்டீவ் ஸ்மித் – விவரம் இதோ

இது போக சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை அணியின் சொந்த மண் போட்டிகளுக்கான இலவச டிக்கெட்டை குறிப்பிட்ட சிஎஸ்கே ரசிகர்களுக்கு வழங்க அந்த அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதற்கு சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அங்கு நடைபெறும் “வினாடி வினா” போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று அவர்கள் கூறும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement