ஏலத்துல எடுக்கலானா என்ன? 2024 ஐ.பி.எல் தொடருக்காக புதிய அவதாரம் எடுத்த ஸ்டீவ் ஸ்மித் – விவரம் இதோ

Smith
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா அணிக்காக மூன்று விதமான ஃபார்மெட்டிலும் விளையாடும் ஸ்மித் தனது அற்புதமான செயல்பாட்டை தொடர்ந்து வழங்கி வருகிறார். அதேபோன்று ஐபிஎல் தொடரிலும் கடந்த 2012-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 2021-ஆம் ஆண்டு வரை விளையாடி இருந்தார்.

அந்தவகையில் இதுவரை 103 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்கள் சராசரியுடனும், 128 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2485 ரன்கள் குவித்துள்ளார். ஆனாலும் ஐபிஎல் தொடரில் இவரால் பெரிய அளவு அதிரடி காட்ட முடியவில்லை என்பதால் கடந்த இரு சீசன்களாக எந்த அணியும் அவரை தேர்வு செய்யவில்லை.

- Advertisement -

கடைசியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியிருந்த அவர் அந்த அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட பிறகு இரண்டு சீசனாகவே எந்த அணியாலும் விலைக்கு வாங்கப்படாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்தியாவில் துவங்கவுள்ள 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனுக்கான தொடரிலும் இடம்பெறாத அவர் புதிய அவதாரத்தை எடுக்க உள்ளார்.

அந்த வகையில் ஸ்டீவ் ஸ்மித் இந்த ஆண்டு ஆங்கில வர்ணனையாளராக ஐபிஎல் தொடரில் செயல்பட இருக்கிறார். இதன் மூலம் முதல் முறையாக அவர் மைக் பிடித்து வர்ணனை செய்ய காத்திருக்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடி ஓய்வு பெற்ற வீரர்கள் மற்றும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரர்கள் வர்ணனையாளர்களாக மாறியுள்ள வேளையில் தற்போது முன்னணி நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித்தும் வர்ணனையாளர் அவதாரம் எடுத்திருப்பது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இவருடன் ஆங்கில வர்ணனையாளர்கள் குழுவில் :

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 : சிஎஸ்கே அணிக்கு – ஹைதெராபாத் சவால் கொடுக்குமா?புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

ஹர்ஷா போக்ளே, சுனில் கவாஸ்கர், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், நிக் நைட், பொம்மி பங்க்வா, டேனி மோரிசன், சைமன் டவுல், ஏபிடி வில்லியர்ஸ், மேத்யூ ஹைடன், தீப் தாஸ் குப்தா, அஞ்சும் சோப்ரா, இயான் பிஷப், ஆலன் வில்கின்ஸ், கெவின் பீட்டர்சன் என ஒரு பெரிய பட்டாளமே வர்ணனை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement