அவங்க 2 பேர் இல்லாம இந்தியா தான் வீக் ஆயிடுச்சு. பாகிஸ்தான் ஸ்ட்ராங் தான் – முன்னாள் பாக் வீரர் கருத்து

Jasprit Bumrah Shaheen Afridi
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் வரும் ஆகஸ்ட் 27 முதல் நடைபெறும் வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியுள்ளது. ஏனெனில் ஆசிய கண்டத்தின் சாம்பியன் தீர்மானிக்கும் இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்றாலும் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதாமல் இது போன்ற ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் மட்டும் மோதுவதே அதற்கு காரணமாகும்.

- Advertisement -

அதைவிட இப்போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய போது விராட் கோலி தலைமையிலான இந்தியாவை வரலாற்றிலேயே முதல் முறையாக உலகக் கோப்பையில் தோற்கடித்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி எழுதியது. அதனால் அவமான தோல்வியை சந்தித்த இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் பாகிஸ்தானை தோற்கடித்து பழி தீர்க்குமா என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கடந்த வருடம் தோற்கடித்ததைப் போல இம்முறையும் இந்தியாவின் பலவீனத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் சவால் விடுத்து வருகின்றனர்.

வெளியேறிய ஷாஹீன்:
இருப்பினும் வரலாற்றில் நடந்த 14 தொடர்களில் 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாகவும் 2018இல் நடைபெற்ற கடைசி ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று நடப்பு சாம்பியனாகவும் களமிறங்கும் இந்தியா கடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பின் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் வென்று வருவதால் நிச்சயம் பாகிஸ்தானை தோற்கடிக்கும் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர். அந்த நிலைமையில் கடந்த வருடம் இந்தியா தோல்வியடைவதற்கு ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோரை அவுட் செய்து ஆட்டநாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இந்த ஆசிய கோப்பையிலிருந்து கடைசி நேரத்தில் காயத்தால் விலகினார்.

Shaheen-afridi-1

அதனால் இந்த ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோரும் தப்பித்து விட்டதாக அந்நாட்டு ரசிகர்கள் கலாய்த்தனர். அதைவிட இந்தியாவின் டாப் ஆர்டர் நிம்மதி அடைந்திருக்கும் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் கேப்டன் வக்கார் யூனிஸ் பதிவிட்டிருந்தது இந்திய ரசிகர்களை கோபப்படுத்தியது. ஏனெனில் அவரை விட திறமையான ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் விலகிய போது நாங்கள் எதுவுமே பேசவில்லையே என்று தெரிவிக்கும் இந்திய ரசிகர்கள் 1992 முதல் தொடர்ச்சியாக எங்களிடம் உலக கோப்பையில் தோற்றுவிட்டு ஒருமுறை வென்று விட்டோம் என்பதற்காக இவ்வளவு கர்வம் ஆகாது என்றும் பதிலடி கொடுத்தனர்.

- Advertisement -

பும்ரா இல்ல:
அந்த வரிசையில் இணைந்துள்ள மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆகிப் ஜாவேத் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோர் இல்லாமல் இந்திய பந்துவீச்சு கூட்டணி தான் பலவீனமாக இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Aakib Javed

“அவர் (ஷாஹீன்) விலகியது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் அவருடைய பந்து வீச்சுக்கு எதிராக எல்பிடபிள்யூ ஆவதிலிருந்து தப்புவோமா அல்லது போல்ட்டாவதில் இருந்து தப்புவோமோ என்ற பதற்றத்துடனேயே பேட்ஸ்மேன்கள் விளையாடுவார்கள். எனவே அவர் பந்து வீசும்போது பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் அழுத்தம் இருக்கும்”

- Advertisement -

“நீங்கள் புதிய பந்தில் மிகச் சிறப்பாக பந்து வீச வேண்டும். குறிப்பாக இந்திய மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை வலுவாக இருக்கும் போது அவர் இல்லாதது பாகிஸ்தானுக்கு கடினத்தை ஏற்படுத்தும். மேலும் 2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2021 டி20 உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்த போது இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்திருந்தனர். எனவே இது இந்தியாவுக்கு மிகப் பெரிய நிம்மதியை கொடுத்திருக்கும். ஏனெனில் புதிய பந்தில் ஷாஹீன் வீசும் போது அவரை யாருமே எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள்”

இதையும் படிங்க : அவங்களுக்கே ஈடு கொடுக்க முடில, இதுல இந்தியாவை தோற்கடிக்க ஆசையா? – பாகிஸ்தானை கலாய்க்கும் ரசிகர்கள்

“அத்துடன் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத இந்திய பந்துவீச்சு கூட்டணி பலவீனமாக மாறியுள்ளது. அவர்களிடம் முகமது ஷமியும் இல்லை. ஆனால் பும்ராவை சார்ந்து இந்தியா இருப்பதை விட ஷாஹீன் அப்ரிடியை அதிகப்படியாக சார்ந்து பாகிஸ்தான் பந்து வீச்சு கூட்டணி இருக்கிறது” என்று கூறினார். இப்படி போட்டி துவங்குவதற்கு முன்பே தொடர்ந்து வாயில் மட்டும் பேசி வரும் பாகிஸ்தானை அமைதியாக இருந்து களத்தில் சாய்க்க ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement