வீடியோ : ஆஷஸ் கோப்பையை விட இந்தியாவை தோற்கடிப்பதே பெரிய சாதனை – 6 நட்சத்திர ஆஸி வீரர்கள் வெறியுடன் பேட்டி

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் கோலாகலமாக துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்குகிறது. ஆனால் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா எப்படியாவது இந்தியாவை தோற்கடிக்கும் வெறியுடன் களமிறங்குகிறது. ஏனெனில் 2004க்குப்பின் இந்திய மண்ணில் களமிறங்கிய அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் தோற்று வரும் ஆஸ்திரேலியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் வரலாற்றில் முதல் முறையாக தங்களது சொந்த மண்ணிலும் தோற்றது.

எனவே இந்த அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக களமிறங்கும் பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா போராட உள்ளது. அதற்காக களமிறங்குவதற்கு முன்பாகவே பிட்ச்களை குறை சொல்லி ஸ்லெட்ஜிங் போரை துவக்கிய ஆஸ்திரேலியா சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய வீரர் அஸ்வின் போலவே பந்து வீசும் லோக்கல் ஸ்பின்னரை தேடிப் பிடித்து பயிற்சி எடுத்து வருகிறது. மொத்தத்தில் 2 அணிகளிலும் விராட் கோலி முதல் ஸ்டீவ் ஸ்மித் வரை தரமான வீரர்கள் நிறைந்திருப்பதால் இந்த தொடரில் அனல் பறக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

ஆஷஸ் விட பெரிது:
அத்துடன் சமீப காலங்களாகவே தங்களுக்கு எதிராக தொடர்ந்து இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் நூற்றாண்டு சிறப்புமிக்க இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை விட இந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் வெற்றி பெறுவது மிகப்பெரிய சாதனை என்று ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் வெறித்தனமாக பேசியுள்ளார்கள். இதை பற்றி கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையம் வெளியிட்டுள்ள வீடியோவில் மிட்சேல் ஸ்டார்க் பேசியது பின்வருமாறு.

“இந்தியாவில் விளையாடுவது எப்போதும் ஸ்பெஷலாகும். ஏனெனில் சொந்த மண்ணில் மிகவும் வலுவாக இருக்கும் அவர்கள் உலகிலேயே எதிர்கொள்ள கடினமான அணிகளில் ஒன்றாக இருக்கிறார்கள். எனவே இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரையும் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரையும் வெல்வது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். அதை நாங்கள் செய்வதற்கு இந்த வருடம் தனித்துவமான வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

டேவிட் வார்னர் பேசியது பின்வருமாறு. “இத்தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது கேரியரில் பெரும்பாலும் தடுமாறியிருந்தாலும் உலகின் சிறந்த ஸ்பின்னர்களை கொண்ட அணிக்கு எதிராக எனது சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த தயாராகியுள்ளேன். கடந்த ஆஷஸ் தொடரில் இருந்தது மிகவும் மிகச் சிறந்தது. ஆனால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களுக்கு மிகவும் கடினமான சவாலாகும்” என்று கூறினார்.

ஜோஸ் ஹேசல்வுட் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதே எங்களுடைய கடைசி இலக்காகும். கடந்த முறை அதற்கான வாய்ப்பு கிடைத்தும் நாங்கள் தவற விட்டு விட்டோம். அங்கே ஆஸ்திரேலியா வெற்றி பெற்று நீண்ட காலங்கள் ஆகிவிட்டது. எனவே இம்முறை நாங்கள் இந்தியாவில் வெற்றி பெற முயற்சிக்கவுள்ளோம்” என்று கூறினார்.

- Advertisement -

ஸ்டீவ் ஸ்மித் பேசியது பின்வருமாறு. “உலகிலேயே இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்வது மிகவும் கடினமாகும். அப்படியானால் அங்கே டெஸ்ட் தொடரில் வெல்வது மலையை தாண்டுவது போன்றதாகும். எனவே இந்தியாவில் நாங்கள் வென்றால் அது ஆஷஸ் கோப்பையை வென்றதை விட மிகப்பெரிய சாதனையாகும்” என்று கூறினார். நேதன் லயன் பேசியது பின்வருமாறு. “இது மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. இதற்காக பெரிய வேலை செய்ய வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். அதை ஆவலுடன் நான் எதிர்நோக்கியுள்ளேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அவர் என் மாணவன்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு – மகத்தான தோனியை பற்றி கங்குலி வியந்து பேசியது இதோ

டிராவிஸ் ஹெட் பேசியது பின்வருமாறு. “இங்கே இருக்கும் சவால் மிகவும் வளர்ந்து வருகிறது. இதற்கு முன் சொந்த மண்ணில் செய்ததை நாங்கள் இம்முறை இங்கே செய்வது நல்லது” என்று கூறினார். இறுதியாக கேப்டன் பட் கமின்ஸ் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் டெஸ்ட் தொடரில் வெல்வது வெளிநாட்டில் ஆஷஸ் தொடரை வெல்வது போல் மிகவும் அரிதாகும். ஒருவேளை இதை வென்றால் இதுவே என்னுடைய கேரியரின் மிகப்பெரிய உச்சமாக இருக்கும். எனவே இந்த வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement