ஐசிசி அவார்ட் வாங்கிட்டா போதுமா? இங்கிலிஷ் பேச தெரியல வெற்றியும் வரல – பாபர் அசாமை விளாசும் முன்னாள் பாக் வீரர்

Babar Azam 1
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் கடந்த 2015இல் அறிமுகமாகி 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி 2019 வாக்கில் விராட் கோலியை மிஞ்சி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறினார். அதனால் கேப்டனாகவும் நியமிக்கப்பட்ட அவர் நாளடைவில் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிரடியாக விளையாட வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Babar Azam Gautam Gambhir

அதனால் நம்பர் ஒன் இடங்களை இழந்த அவரிடம் அணியின் நலனுக்காக ஓப்பனிங் இடத்தை இளம் வீரர்களுக்கு கொடுத்து விட்டு மிடில் ஆர்டரில் விளையாடுமாறு வாசிம் அக்ரம், கௌதம் கம்பீர் போன்ற முன்னாள் வீரர்கள் வெளிப்படையான கோரிக்கை வைத்தனர். ஆனால் எதையும் கேட்காமல் தொடர்ந்து ஓப்பனிங் இடத்தில் விளையாடும் அவர் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரில் ஒன்று சொற்ப ரன்களில் அவுட்டாவது அல்லது பெரிய ரன்களை குவித்தாலும் அதை குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுப்பது போன்ற பேட்டிங்கை வெளிப்படுத்தி பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார்.

- Advertisement -

அவார்ட் வாங்கி என்ன பயன்:
அதே போல் கேப்டனாகவும் முக்கிய தருணங்களில் சுமாராகவே செயல்படும் அவரது தலைமையிலான பெசாவர் அணி இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் தடுமாறி வருகிறது. அதனால் விமர்சனங்களை சந்தித்து வரும் பாபர் அசாமை முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடந்த சில நாட்களாகவே சரமாரியாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக என்ன தான் நட்சத்திர வீரராக இருந்தாலும் சிறப்பாக ஆங்கிலம் பேச தெரியாத காரணத்தாலேயே விராட் கோலி போல உங்களால் பிராண்டாக உருவாக முடியவில்லை என்று பாபர் அசாமை அவர் விமர்சித்தது பாகிஸ்தான் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

Babar-Azam

அதற்கு ஆங்கிலம் முக்கியமல்ல விளையாட்டு தான் முக்கியம் என்று சில பதிலடிகள் வந்தன. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட பாகிஸ்தான் வெல்லாத நிலையில் 2022ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி வீரர் விருதை மட்டும் வென்று என்ன பயன் என்று மீண்டும் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் அசாம் கான் போன்ற இளம் வீரர்கள் கூட பொறுப்புடன் செயல்படும் நிலையில் பாபர் அசாம் தனது இடத்துக்காக விளையாடுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அசாம் கான் கூட குருட்டுத்தனமாக அடிக்காமல் பொறுப்புடன் செயல்படுவதாக நான் கருதுகிறேன். அதே போல் செய்தியாளர்கள் சந்திப்பிலும் அவர் தன்னுடைய செயல்பாடுகளைப் பற்றி சிறந்த முறையில் பேசினார். 20 வருடங்களுக்கு முன்பாக நான் விளையாடிய போது செய்தியாளர்களிடம் பேசுவதை பற்றி கவலைப்பட மாட்டேன். ஆனால் இந்த காலத்தில் ஊடகங்கள் உங்களது வேலையில் ஒன்றாக இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் “இது உங்களது பிரச்சனை. இதை திருத்திக் கொள்ளுங்கள்” என்று மட்டுமே என்னால் உங்களுக்கு சொல்ல முடியும். மேலும் பாபர் அசாம் பேசுவதை வைத்து பார்க்கும் போது அவர் கேப்டன்ஷிப் செய்வதற்கு தகுதியானவர் போல் தோன்றும்”

Akhtar

“அத்துடன் வாசிம் அக்ரம், வாக்கார் யூனிஸ், ஷாஹித் அப்ரிடி, அப்துல் ரசாக் ஆகியோர் விளையாடும் போது இந்த மொத்த மைதானமும் ரசிகர்களும் என்னுடையது நாங்கள் தான் இந்த இடத்தை கட்டுப்படுத்துகிறோம் என்று சொல்வார்கள். அவ்வாறு தான் நீங்கள் சிறப்பாக விளையாடி நட்சத்திரங்களாக உருவெடுக்க முடியும். மாறாக ஐசிசி விருதுகளை வெல்வதால் மட்டும் நட்சத்திரமாகி விட முடியாது. பாபருக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர். அந்த உரிமையை எடுத்துக் கொண்ட அவர் நான் தான் இங்கே அனைத்தையும் நடத்துகிறேன் என்ற வகையில் செயல்படுகிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs AUS : ஒருநாள் தொடரிலிருந்து காயத்தால் விலகும் ஆஸி வீரர் – ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு நேர்ந்த சோகம்

அத்துடன் ஆல் ரவுண்டர் சடாப் கான் கேப்டனாக வருவதற்கு தகுதியானவர் என்றும் பேசியுள்ள சோயப் அக்தர் இப்படி அடுத்தடுத்து பாபர் அசாமுக்கு எதிராக பேசி வருவது பாகிஸ்தான் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement