தோனியை பழிவாங்க துடிக்கும் வில்லியம்சன்..! ஏன் தெரியுமா..? – காரணம் இதுதான்..!

kane
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் முதல் இரண்டு இறுதி போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகளுமே முடிவடைந்து விட்டது. இந்த தொடரில் சென்னை அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு நுழைந்த்து விட்டது. வரும் ஞாற்றுக்கிழமை நடக்கவுள்ள இறுதி போட்டியில் சென்னை அணியை சந்திக்க போவது ஹைதராபாத் அணியா, கொல்கத்தா அணியா என்று நாளை நடக்க உள்ள போட்டியில் தெரிந்து விடும். ஐ.பி.எல் போட்டியின் இறுதி போட்டிக்கான முதல் தகுதி சுற்று போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (மே 22) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை 2 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வரும் ஞாற்றுக்கிழமை (மே 27) நடைபெற உள்ள இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. மேலும் இந்த தொடரின் இறுதி போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்று போட்டி நேற்று (மே 23) கொல்கத்தா, ஹெடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது . இந்த போட்டியில் புள்ளிபட்டியலில் 3 மற்றும் 4 வது இடத்தில் இருந்த கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது.

- Advertisement -

இதில் ராஜஸ்தான் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி. இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணியை வென்று இறுதி போட்டியில் ஹைதராபாத் அணி சென்னையை சந்திக்க மிகுந்த வன்மையில் உள்ளது. ஏனென்றால் இந்த ஐபிஎல் தொடரில் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில இருந்த ஹைதராபாத் அணி இதுவரை 3 முறை சென்னை அணியுடன் தோற்றுள்ளது.

Kane-Williamson
இந்த தொடரில் முதல் அணியாக பிலே ஆப் சுற்றிற்கு தகுதிபெற்ற போதும் சென்னை அணியுடன் ஒரு முறை கூட வெற்றி பெற முடியவில்லை. முதல் தகுதி சுற்றில் சென்னை அணியுடன் அடைந்த தோல்வியால் தான் நாளை நடைபெறவுள்ள போட்டியில் ஹைதராபாத் அணி விளையாட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது. ஒருவேளை நாளை நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அநியாய வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்து சென்னை அணியை வீழ்த்துமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement