Kane Williamson : இவர்கள் இருவரின் சிறப்பான ஆட்டத்தினாலே இன்று சிறப்பான நிலையில் உள்ளோம் – வில்லியம்சன்

ஐ.பி.எல் தொடரின் 48 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், அஸ்வின் தலைமை

Williamson
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 48 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

Ashwin

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக வார்னர் 81 ரன்களும், மனிஷ் பாண்டே 36 ரன்களையும் குவித்தனர்.

இதனால் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 167 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக ராகுல் 79 ரன்களை அடித்தார். இதனால் ஹைதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Warner

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய வில்லியம்சன் கூறியதாவது :இந்த போட்டியினை முழுமையான போட்டியாக நான் கருதுகிறேன்.பேர்ஸ்டோ மற்றும் வார்னர் ஆகியோர் இந்த தொடரில் எங்களது அணியை சிறப்பான நிலைக்கு எடுத்து சென்றனர். அவர்கள் இருவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். இதுபோன்ற ஆட்டத்தினையே நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் கொடுக்க நினைத்தோம்.

SRH

நாங்கள் கடைசியாக விளையாடிய போட்டியில் பஞ்சாப் அணியிடம் தோற்றோம் அதனால் இந்த போட்டி கடினமாக இருக்கும் என்று நினைத்தேன். இந்த போட்டியில் எங்களது அணியின் பீல்டிங் அருமையாக இருந்தது. இறுதி போட்டிக்கு முன்பாக கடினமாக பயிற்சி எடுத்த பின்னரே இறுதி போட்டி குறித்து பேச முடியும். இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன. அதிலும் வெற்றி பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று வில்லியம்சன் கூறினார்.

Advertisement