Kane Williamson : பவுலர்களை இப்படி உபயோகிக்கலாம் என்று நினைத்தோம். இந்த தவறே தோல்விக்கு காரணம் – வில்லியம்சன்

ஐ.பி.எல் தொடரின் 45ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ்

Williamson
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 45ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

smith 1

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன்களையும், டேவிட் வார்னர் 37 ரன்களையும் குவித்தனர்.

இதனையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து ஆடிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 48 ரன்களை அடித்தார். துவக்க வீரரான லிவிங்ஸ்டன் 44 ரன்களை அடித்தார்.

Livingstone

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வில்லியம்சன் கூறியதாவது : பாதி போட்டி வரை நல்ல ரன்களை குவித்திருந்தோம். அதன்பிறகு ரன்களை குவிக்க தவறிவிட்டோம். அவர்கள் எங்களை விட நன்றாக ஆடினார்கள். எங்களால் போட்டியின் பிற்பாதியில் ரன்களை குவிக்க முடியவில்லை இதிலிருந்து தவறுகளை செய்ததை உணர்ந்து கற்றுக்கொண்டோம். எங்களால் நல்ல ரன்களை குவித்திருக்க முடியும் ஆனால், இந்த போட்டியில் அதனை செய்ய தவறிவிட்டோம் மனிஷ் பாண்டே சுதந்திரமாக ஆடினார்.

Samson

உள்ளூர் போட்டிகளில் ஆடும் பொது நல்ல ஆட்டத்தினை வெளிப்படுத்திருக்க வேண்டும். ஆறாவது பவுலரை நாங்கள் உபயோகிக்கலாம் என்று நினைத்தோம் ஆனால், உபயோகிக்கவில்லை. ராஜஸ்தான் அணி 6 ஆவது பந்துவீச்சாளரை உபயோகித்தனர். இந்த எண்ணம் ஆட்டத்தை எதிர்புறமாக திருப்பியது. ராஜஸ்தான் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த தோல்வியை மறந்து இனிவரும் இரண்டு போட்டிகளில் வெற்றிக்கு திரும்புவோம் என்று வில்லியம்சன் கூறினார்.

Advertisement