SRH vs DC : டாப் ஆர்டர் தவிர வேறு யாருமில்லை. தோல்விக்கு இதுவே காரணம் – வில்லியம்சன் வேதனை

ஐ.பி.எல் தொடரின் 30 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Williamson
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 30 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியும் மோதின.

Iyer

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஐயர் 45 ரன்களும், காலின் முன்ரோ 24 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டும் அடித்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஒருகட்டத்தில் 72 ரங்களுக்கு 1 விக்கெட்டை மட்டும் இழந்த சன் ரைசர்ஸ் அணி 10 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோல்வியை அடைந்தது. டெல்லி அணி சார்பில் 22 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தது ரபாடா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Munro

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வில்லியம்சன் கூறுகையில் : முதல் பாதியில் எங்கள் அணி நல்ல நிலைமையில் இருந்தது. அடுத்து பாட்னர்ஷிப் அமையாததால் ரன்களை குவிக்க முடியவில்லை. 160 க்கும் குறைவான ரன்கள் வெற்றி பெற கூடிய ரன்களே ஆனால், டெல்லி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எங்கள் அணியை கட்டுப்படுத்தினர்.

RABADA

இந்த தொடரில் எந்த அணியும், எந்த அணியையும் வெற்றி பெற தகுதியான அணியே. இருப்பினும், இந்த போட்டியில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி எங்கள் அணியை வீழ்த்தியது. எங்கள் அணியின் துவக்க வீரர்கள் தவிர வேறு யாரும் சரியாக விளையாடவில்லை இதனை நான் ஒப்புக்கொள்கிறேன் என்று வில்லியம்சன் தெரிவித்தார்.

Advertisement