வில்லியம்சன் மட்டும் தான் நல்ல விளையாடுறாரு அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா ? – 5 ஆவது போட்டியில் பங்கேற்பாரா ?

Williamson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4 – 0 என்ற நிலையில் தொடரில் முன்னிலையில் உள்ளது. நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணிக்கு டிம் சவுதி கேப்டனாக செயல்பட்டார்.

Southee-1

- Advertisement -

அந்த அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான வில்லியம்சன் விளையாடாதது அந்த அணிக்கு பெரும் இழப்பாக அமைந்தது. ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே அந்த அணிக்காக சிறப்பாக விளையாடி வருபவர் வில்லியம்சன். அதிலும் குறிப்பாக மூன்றாவது டி20 போட்டியில் என்னதான் ரோகித் சர்மா 2 சிக்சர்களை அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றாலும் நியூசிலாந்து அணிக்காக தனி ஒரு ஆளாக நின்று 95 ரன்கள் குவித்து அந்த அணியை கிட்டதட்ட வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

ரோஹித்தின் சூப்பர் ஓவர் அதிரடியால் வில்லியம்சனின் அந்த சிறப்பான ஆட்டம் மறைந்து போனது இப்படி பட்ட வீரர் நேற்றைய போட்டியில் ஆடாதது அவர்களுக்கு மைனஸ் என்றே கூறலாம். தற்போது வில்லியம்சன் நேற்றைய போட்டியில் ஏன் பங்கேற்க வில்லை என்ற காரணம் வெளியாகியுள்ளது. அதன்படி நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி வில்லியம்சன் மூன்றாவது டி20 போட்டியின் போது பீல்டிங்கில் டைவ் அடித்ததால் இடது தோள்பட்டையில் காயம் அடைந்துள்ளதாகவும் அந்த காயம் காரணமாக அவர் நான்காவது டி20 போட்டியில் விளையாடவில்லை என்றும் தெரியவந்துள்ளது. மேலும் ஐந்தாவது போட்டிக்கு அவர் நிச்சயம் விளையாடுவார் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement