ரிவியூ எடுக்க தாமதமானதால் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து ஓப்பனர் – என்ன நடந்தது ?

Young
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 25-ஆம் தேதி தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இறுதி நாளை எட்டியுள்ளது. போட்டியின் ஐந்தாவது நாளான இன்று சுவாரசியமான கட்டத்தில் ஆட்டம் சென்றுகொண்டிருக்கிறது. முதல் இன்னிங்சில் 345 ரன்கள் குவித்த இந்திய அணியானது இரண்டாவது இன்னிங்சில் 234 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய தற்போது நியூசிலாந்து அணி 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி நாளில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் வில் யங் அதிர்ஷ்டம் இன்றி ஆட்டமிழந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 89 ரன்கள் குவித்த அவர் 2வது இன்னிங்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று 4 ஆம் நாள் ஆட்டநேர இறுதியில் வில் யங் 2 ரன்கள் எடுத்திருந்த போது அஷ்வின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் இந்த விக்கெட் சரியான ஒன்று கிடையாது. ஏனெனில் ரீபிளேவின் பந்து ஸ்டம்பை தாண்டி சென்றது தெளிவாக தெரிய வந்தது.

வில் யங் பந்து பேடில் பட்டபிறகு எதிர்முனையில் இருந்த டாம் லேதமிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் இருவரும் ஒருமுடிவுக்கு வந்து ரெவியூ செல்வதற்குள் நேரம் கடந்துவிட்டது. அதனால் சரியான நேரத்திற்குள் ரிவ்யூ எடுக்கவில்லை என்கிற காரணத்தினால் அதிர்ஷ்டம் இன்றி வில் யங் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை சமன் செய்த – ஆமை அண்ணன் புஜாரா

எப்பொழுதுமே ரிவ்யூ எடுக்க 12 நொடிகள் நேரம் ஒதுக்கப்படும் அந்த நேரத்திற்குள் நாம் ரிவ்யூ எடுத்தாக வேண்டும். அதனை கடந்து தாமதமாகவே எடுத்ததால் வில் யங் தனது விக்கெட்டை இழக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement