இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை சமன் செய்த – ஆமை அண்ணன் புஜாரா

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 25-ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் துவங்கி இன்று போட்டியின் கடைசி நாளான ஐந்தாவது நாளில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் பல சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போதைய அணியின் மூத்த வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Pujara

- Advertisement -

ஆனால் இருவருமே இந்த டெஸ்டில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதிலும் குறிப்பாக புஜாரா முதல் இன்னிங்சில் 26 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே இவரது ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளதால் இவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் தற்போது ரசிகர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.

அந்த அளவிற்கு புஜாராவின் மோசமான ஆட்டம் இன்னும் தொடர்கிறது. அதிக பந்துகளை எதிர்கொண்டு மிக சொற்ப ரன்களே அடிப்பதாக இவர் மீது விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது அவர் பெரிய ரன்களை குவிக்க தடுமாறி வருவதால் இக்கட்டான சூழ்நிலையில் புஜாரா சிக்கியுள்ளார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது ஒரு மோசமான சாதனைக்கும் அவர் சொந்தக்காரராக மாறியுள்ளார்.

pujara 2

அதன்படி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 3-வது வீரராக களமிறங்கி அதிக இன்னிங்சில் சதம் அடிக்காத வீரராக அஜித் வடேகர் இருந்தார். 1968 முதல் 1974 வரை 39 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் சதமின்றி விளையாடி வந்தார். அதனை தொடர்ந்து தற்போது புஜாரா கடந்து 2019ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 39 இன்னிங்ஸ்களாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : பதவியில் இருந்தாலும் பரவாயில்ல அவரை அணியில் இருந்து நீக்கிடுங்க – சீனியர் வீரரை விமர்சிக்கும் ரசிகர்கள்

இதேபோன்று ஏற்கனவே அவர் 2013 முதல் 16 வரை 37 இன்னிங்ஸ்களிலும் சதம் இல்லாமல் விளையாடி வந்தார். இப்படி கிட்டத்தட்ட 20 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்காமல் தொடர்ந்து விளையாடி வரும் இவர் அணியில் 3வது வீரராக ஏன் விளையாட வேண்டும் ? என்றும் அவருக்கு பதிலாக இளம் வீரரை அந்த இடத்தில் சேர்க்கலாம் என்றும் ரசிகர்கள் கொந்தளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement