இந்தியாவை பாலோ பண்ணி அடுத்த வருசம் மிஞ்சி காட்டுகிறோம் – புதிய பாகிஸ்தான் செலக்டர் அஃப்ரிடி அதிரடி அறிவிப்பு

Afridi
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் பாகிஸ்தான் 2022ஆம் ஆண்டு சொந்த மண்ணிலேயே வரலாறு காணாத தோல்விகளை சந்தித்தது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் தோற்று 1 – 0 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த அந்த அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் 3 – 0 (3) என்ற கணக்கில் தோற்றது. அதன் வாயிலாக வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர் போட்டிகளில் தோற்ற அந்த அணி 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பைகளில் ஃபைனலில் தோற்றது.

PAK Ramiz Raja

அது போக சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 4 – 3 (7) என்ற கணக்கில் தோற்ற பாகிஸ்தான் உலக அளவில் கடுமையான கிண்டல்களையும் விமர்சனங்களையும் சந்தித்தது. போதாகுறைக்கு தார் ரோடு போல சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் அமைக்கப்பட்டிருந்த பிட்ச் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளானது. அத்துடன் சராசரிக்கும் குறைவானது என்ற மதிப்பளித்த ஐசிசி ஒன்றுக்கு 2 முறை கராச்சி மைதானத்திற்கு கருப்பு புள்ளி வழங்கியது. அப்படி அனைத்து ஏரியாவிலும் அடி வாங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்போது அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

- Advertisement -

இந்தியா மாதிரி:
முதலில் வாயில் மட்டும் பேசிக் கொண்டிருந்த ரமீஷ் ராஜா இரவோடு இரவாக தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு முன்னாள் தலைவர் நாசாம் செதி பொறுப்பேற்றார். அவரது தலைமையில் மொத்த பாகிஸ்தான் வாரியமும் மாற்றியமைக்கப்பட்ட நிலையில் தற்காலிக தேர்வுக்குழு தலைவராக முன்னாள் ஜாம்பவான் வீரர் சாகித் அப்ரிடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் நடைபெற்று வரும் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அஹமத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு மிகச்சிறந்த கம்பேக் கொடுத்து முதல் போட்டியை டிரா செய்ய உதவினார்.

Pak vs NZ Devon Conway

அதனால் பாராட்டுகளைப் பெற்று வரும் சாகித் அப்ரிடி விரைவில் ஒரே நேரத்தில் 2 பாகிஸ்தான் அணிகள் விளையாடும் அளவுக்கு இளம் வீரர்களை கண்டறிந்து வாய்ப்பளித்து வளர்க்கப் போவதாக கூறியுள்ளார். உலக அளவில் தற்போது இங்கிலாந்து மற்றும் இந்தியா மட்டுமே ஒரே நேரத்தில் 2 அணிகளை களமிறக்கி வருகின்றன. குறிப்பாக ஆசிய கண்டத்தில் தங்களுடைய பரம எதிரியாக இருந்தாலும் முதன்மை அணியாக திகழும் இந்தியாவைப் பின்பற்றி விரைவில் 2 பாகிஸ்தான் அணிகள் உருவாக்கப்படும் என்று சாகித் அப்ரிடி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“என்னுடைய பதவி காலம் முடிவதற்கு முன் 2 பாகிஸ்தான் அணிகளை உருவாக்கி பெஞ்ச்சில் உள்ள வீரர்களையும் பலமானவர்களாக மாற்ற முயற்சிக்க விரும்புகிறேன். சமீப காலங்களில் சந்தித்த தோல்விக்கு இதற்கு முன் வீரர்கள், அணி நிர்வாகம் மற்றும் வாரியத்திடம் இருந்த தவறான தகவல் தொடர்புகளே முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். ஆனால் தற்போது பாகிஸ்தான் அணியில் உள்ள வீரர்களிடம் தனித்தனியாக பேசிய நான் அவர்களது பிரச்சனைகளை கேட்டு அறிந்துள்ளேன். குறிப்பாக ஹாரிஸ் ரவூப் மற்றும் பகார் ஜமான் ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களுடைய காய்களைப் பற்றி கேட்டறிந்தேன்”

Afridi

“மேலும் தேர்வுக்குழு மற்றும் வீரர்களிடையே நேரடியான தகவல் தொடர்பு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதே சமயம் பாபர் அசாம் பாகிஸ்தான் அணியின் முதுகெலும்பு என்பதால் அவருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் டிக்ளர் செய்த முடிவு மிகவும் சரியாக இருந்தது”

இதையும் படிங்கIND vs SL : ராகுலுக்கு பதில் 2023 உ.கோ’யில் ரோகித்துடன் அவர் தான் சரியான தொடக்க வீரர் – பேட்டிங் வரிசையை வெளியிட்ட கம்பீர்

“அந்த வகையில் நாங்கள் முன்னோக்கி நடக்க முயற்சிக்கவுள்ளோம். ஆனால் தற்போதுள்ள பிட்ச்கள் அதற்கு உதவி அளிக்காது. குறிப்பாக அவை பந்து வீச்சாளர்களுக்கு உதவாது. எனவே இத்தொடரில் 2வது போட்டியில் பவுன்ஸ்க்கு உதவும் பிட்ச்சை உருவாக்க நாங்கள் முயற்சிக்க உள்ளோம்” என்று கூறினார்.

Advertisement