சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் ஆஸ்திரேலிய அணி பல ஆண்டுகளாக ஆதிக்கம் மிகுந்த சக்தி வாய்ந்த அணியாக திகழ்ந்து வருகிறது. அந்த அளவிற்கு திறமையான பல வீரர்கள் அந்த அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார்கள். ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்து விளையாடுவதே கடினமான பார்க்கப்படும் வேளையில் தற்போது ஆஸ்திரேலிய அணியில் விளையாடிய 27 வயது இளம் வீரர் ஒருவர் இளம் வயதிலேயே ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு ஒரு சோகமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
27 வயதிலேயே ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய வீரர் :
அந்த வகையில் 19 வயதுக்குட்பட்டோர் ஆஸ்திரேலியா அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய இளம் வீரரான வில் புகோவ்ஸ்கி கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஆஸ்திரேலியா அணியில் இணையும் வாய்ப்பினை பெற்றார். அதன்பிறகு கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடி 72 ரன்களை குவித்திருந்தார்.
இவர் இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானபோது மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்ட வேளையில் அவருக்கு அடிக்கடி ஏற்படும் ஒரு காயம் அவரது காரியரையே தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய போது ரிலே மெரிடித் வீசிய பவுன்சர் பந்து தலையில் தாக்கியதால் கடந்த பல மாதங்களாக அவர் எவ்வித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்றாமல் ஓய்வில் இருந்து வந்தார்.
ஆனால் அவரது உடற்தகுதியை சரிபார்த்த மருத்துவர்கள் அவருக்கு தலையில் அடிக்கடி பந்து தாக்கியதன் காரணமாக ஏற்பட்ட கன்கஷன் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இனி கிரிக்கெட்டை அவர் விளையாட கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் அவர் கிரிக்கெட் விளையாடும் தகுதியும் இழந்து விட்டதால் உடல்நலத்தை கணக்கில் கொண்டு அவர் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்றும் தங்களது அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.
கடந்த ஆண்டே இந்த மருத்துவக்குழு அறிவிப்பு வெளியாகி இருந்தாலும் சிறிது பிரேக் எடுத்திருந்த புகோவ்ஸ்கி தற்போது ஒரு விடுமுறைக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலியா வந்து தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அப்படி அவர் அறிவித்திருந்த அந்த ஓய்வு முடிவில் குறிப்பிடப்பட்டதாவது : நான் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு. கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான போது 100 டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தற்போது கனத்த மனதுடன் தான் ஓய்வை அறிவிக்கிறேன்.
இதையும் படிங்க : எவ்ளோ நாள் தான் மும்பைக்கு அதை செய்யாம இப்படியே ஓட்டுவீங்க.. ரோஹித் மீது இயன் பிஷப், சாஸ்திரி அதிருப்தி
எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் எனது உடல்நலத்தின் மீது அக்கறை காட்டுகிறார்கள். அவர்களை பயமுறுத்த விரும்பவில்லை அதனாலே நான் நேசித்த இந்த விளையாட்டில் இருந்து விலகுகிறேன். எனக்கு தற்போது 27 வயதுதான் ஆகிறது. நான் இன்னும் நிறைய சாதிக்க விரும்புகிறேன் எனவே அதை நோக்கி என்னுடைய அடுத்தகட்ட பயணத்தை துவங்குகிறேன் என வில் புகோவ்ஸ்கி கூறியது குறிப்பிடத்தக்கது.



