367 ரன்ஸ்.. என்னா மனசுய்யா.. லாராவுக்காக 400 அடிக்காமல் டிக்ளேர் செய்த முல்தர்.. 67 வருட உலக சாதனை

Wiaan Mulder
- Advertisement -

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாபிரிக்கா அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டில் 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் கேசவ் மஹராஜ் தலைமையில் தென்னாப்பிரிக்கா வென்றது. அந்த நிலையில் ஜூலை 6ஆம் தேதி புலவாயோ நகரில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் 2வது போட்டித் துவங்கியது.

அதில் வியான் முல்தர் தலைமையில் களமிறங்கிய தென்னாபிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு துவக்க வீரர்கள் டோனி டீ ஜோர்சி 10, செனோக்வேனே 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் முல்தர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

சேவாக்கிற்கு பின் மிரட்டல்:

அவருடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் பேடிங்கம் 82 ரன்கள் குவித்து அசத்தினார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய முல்தர் சதத்தை அடித்து நன்றாக பேட்டிங் செய்து வந்தார். அவருடன் நான்காவது விக்கெட்டுக்கு 217 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ட்ரே பிரிட்டோரியஸ் 78 ரன்கள் குவித்து அவுட்டானார்.

மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய முதல் இரட்டை சதத்தை வேகமாக ரன்களை குவித்தார். எதிர்ப்புறம் வந்த தேவால்ட் ப்ரேவிஸ் 30 ரன்னில் அவுட்டானாலும் கெய்ல் வேரின் 42* ரன்கள் எடுத்தார். இந்தப் பக்கம் ஓயாமல் அடித்த முல்தர் 297 பந்துகளில் முச்சதத்தை தொட்டார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரேந்திர சேவாத்திற்கு (278) பந்துகள் பின் 2வது வேகமான முச்சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

- Advertisement -

என்னா மனசுய்யா:

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 367* ரன்கள் எடுத்ததால் 400 ரன்களை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது திடீரென தென்னாப்பிரிக்காவின் ஆட்டத்தை 626/5 ரன்களுடன் முடித்துக் கொள்வதாக கேப்டன் முல்தர் அறிவித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சில நிமிடங்களில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ப்ரைன் லாராவின் 400 ரன்கள் சாதனையை உடைக்க விரும்பாத காரணத்தாலேயே முல்தர் தம்முடைய ஆட்டத்தை டிக்ளேர் செய்ததாக தென்னாப்பிரிக்கா அணியின் சார்பில் கிரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியானது.

அதனால் லாராவின் மீதான மரியாதை காரணமாக ஆல் டைம் உலக சாதனையை முல்தர் பெருந்தன்மையுடன் தவற விட்டார். இருப்பினும் ஒரு வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் (367*) அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 1958ஆம் ஆண்டு பார்படாஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக பாகிஸ்தானின் ஃஹனீப் முகமது 337 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: ஆட்டமிழக்காமல் 334 பந்துகளில் 367 ரன்கள் குவித்தும் டிக்ளேர் செய்வதாக அறிவித்த தெ.ஆ கேப்டன் – தியாகச் செம்மல்

அது போக தென்னாபிரிக்காவுக்காக ஒரு போட்டியில் அதிக ரன்கள் (367) குவித்த வீரர் என்ற வரலாற்றையும் முல்தர் படைத்துள்ளார். இதற்கு முன் 2003 பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக கிரேம் ஸ்மித் 362 ரன்கள் (277, 85) அடித்ததே முந்தைய சாதனை. அவரை தற்போது என்ன மனுஷன்யா என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement