ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே முடிவடைந்த வேளையில் அந்த போட்டியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
367* ரன்களில் டிக்ளேர் செய்வதாக அறிவித்த வியான் முல்டர் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நேற்று ஜூலை 6ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியானது :
தங்களது முதல் இன்னிங்சில் இரண்டாம் நாளான இன்று உணவு இடைவேளையின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 626 ரன்களை குவித்திருந்த வேளையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது ஜிம்பாப்வே அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டனாக அறிமுகமாகிய வியான் முல்டர் 334 பந்துகளை சந்தித்து 49 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 367 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்திய அவர் லாராவின் 400 ரன்கள் சாதனையையும் முறியடிக்க வாய்ப்பு இருந்தது.
ஆனால் உணவு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பேட்டிங் செய்ய விரும்பாத அவர் டிக்ளர் செய்வதாக அறிவித்து தனது சுயநலமற்ற எண்ணத்தை வெளிக்காட்டி உள்ளார். அதாவது உணவு இடைவெளிக்கு பின்னர் இன்னும் 5 முதல் 10 ஓவர் விளையாடியிருந்தால் கூட 400 ரன்களை அவரால் எளிதில் எட்டிருக்க முடியும். ஆனால் அணியின் வெற்றியே முக்கியம் என்று நினைத்த அவர் டிக்ளர் செய்வதாக அறிவித்தார்.
இதையும் படிங்க : இந்த பிட்ச்ல இங்கிலாந்தை தள்ளி இந்தியா ஜெய்க்க அவங்க 2 பேர் தான் காரணம்.. கில்லும் அசத்திட்டாரு.. கோலி பாராட்டு
இருந்தாலும் கேப்டனாக வெளிநாட்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த வீரராக இந்த 367 ரன்கள் மூலம் அவர் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டும் இன்றி தென்னாப்பிரிக்க வீரராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஹசிம் ஆம்லாவை (311) பின்னுக்கு தள்ளியுள்ளார்.



