264 ரன்ஸ்.. ஜிம்பாப்வேயை அடித்து நொறுக்கிய தெ.ஆ கேப்டன் முல்தர்.. விராட் கோலியை முந்தி உலக சாதனை

Wiaan mulder 2
- Advertisement -

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கே 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் 2வது போட்டி ஜூலை 6ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கியது.

புலவாயோ நகரில் இருக்கும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர்கள் டோனி டீ ஜோர்சி 10, செனோக்வனே 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் அடுத்ததாக தற்காலிக கேப்டன் வியான் முல்தர் மற்றும் டேவிட் பேட்டிங்கம் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

- Advertisement -

நொறுக்கப்படும் ஜிம்பாப்வே:

அதில் கேப்டன் முல்தர் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் கொஞ்சம் நிதானம் காட்டிய பேடிங்கம் அரை சதத்தை அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 217 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 82 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய முல்தர் சதத்தை அடித்து அசத்தினர்.

அடுத்ததாக வந்த இளம் வீரர் டிரே பிரிட்டோரிஸ் தம்முடைய பங்கிற்கு நான்காவது விக்கெட்டுக்கு 217 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதத்தை அடித்து 78 ரன்னில் அவுட்டானார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து சுமாராக பவுலிங் செய்த ஜிம்பாப்வே பவுலர்களை அடித்து நொறுக்கிய முல்தார் இரட்டை சதத்தை அடித்தார். நேரம் செல்ல செல்ல ஓயாத அவர் முதல் நாள் முடிவில் 264* (259) ரன்கள் குவித்து முச்சதத்தை நெருங்கியுள்ளார்.

- Advertisement -

உலக சாதனை கேப்டன்:

அவருடன் தேவால்டு ப்ரேவிஸ் 15* ரன்கள் எடுத்துள்ளதால் முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா 465/4 ரன்களை அடித்து வலுவான துவக்கத்தைப் பெற்றுள்ளது. முன்னதாக இப்போட்டியில் வியான் முல்தர் தற்காலிகமாக தென்னாபிரிக்காவின் கேப்டனாக செயல்படுகிறார். ஆனால் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே அவர் இரட்டை சதத்தை அடித்து 264* ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க: புற்று நோயால் போராடும் தனது சகோதரிக்கு இந்த வெற்றியை அர்ப்பணித்த ஆகாஷ் தீப் – நெகிழ்ச்சியான பேட்டி

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி இந்தியாவின் கேப்டனாக விளையாடிய முதல் போட்டியில் 256 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனை. இது போக கிரேம் ஸ்மித்துக்கு பின் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 250+ ரன்களை அடித்த 2வது தென்னாபிரிக்க கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். கோலியை முந்தி உலக சாதனை

Advertisement