வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் இலங்கை வென்றது. அதனால் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக முதல் முறையாக ஒரு இருதரப்பு தொடரையும் வென்று இலங்கை சாதனை படைத்தது. அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இலங்கை அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது.
அதனால் அந்த அணி ஆரம்பத்திலேயே ஒருநாள் தொடரையும் வென்ற நிலையில் கடைசி போட்டி அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற்றது. பல்லக்கேல் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவது அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு நிசாங்கா 56, அவிஸ்கா பெர்னாண்டோ 34, குசால் மெண்டிஸ் அதிரடியாக 56* (22) ரன்கள் எடுத்தனர்.
அசத்திய வெஸ்ட் இண்டீஸ்:
அதனால் 23 ஓவரில் இலங்கை 156-3 என்ற நிலையில் விளையாடிக் கொண்டிருந்த போது மழை வந்தது. அப்போது சில மணி நேரங்கள் கழித்து மழை ஒதுங்கியதால் போட்டி மீண்டும் துவங்கியது. அதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 23 ஓவரில் 195 ரன்கள் வேண்டும் என்ற புதிய இலக்கு டிஎல்எஸ் விதிமுறைப்படி உருவாக்கப்பட்டது.
அதைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் எவின் லெவிஸ் அதிரடியாக விளையாடினர். மறுபுறம் மற்றொரு துவக்க வீரர் பிரெண்டன் கிங் 16 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த கேப்டன் ஷாய் ஹோப் 22 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் அதற்கடுத்ததாக வந்த ரூதர்போர்ட் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.
19 வருடங்கள் கழித்து:
அவர்களுடைய அதிரடியான ஆட்டத்தால் 22 ஓவரிலேயே 196-2 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எவின் லெவிஸ் சதமடித்து 102* (61) ரன்களும் ரூதர்போர்ட் அரை சதமடித்து 50* (26) ரன்களும் குவித்து அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் இத்தொடரை ஆறுதல் வெற்றியுடன் வெஸ்ட் இண்டீஸ் நிறைவு செய்தது.
இதையும் படிங்க: 12 வருசத்துல 1.. இப்படி சொல்லவா நீங்க கேப்டனா இருக்கீங்க.. ரோஹித் சர்மாவின் கருத்தை விளாசும் ரசிகர்கள்
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை மண்ணில் 2005க்குப்பின் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் சாதனை வெற்றியையும் பதிவு செய்தது. கடைசியாக 2005ஆம் ஆண்டு வென்ற அந்த அணி அதன் பின் இலங்கையில் கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து தோற்றது. தற்போது அதை நிறுத்தியுள்ள வெஸ்ட் இண்டீஸ் 19 வருடங்கள் கழித்து இலங்கையில் வென்றுள்ளது. மறுபுறம் இலங்கை 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்றது.



