IND vs WI : கட்டுக்கடங்காமல் முக்கிய ரன்களை விளாசிய கேப்டன் போவல் – வலுவாக சிக்கிய இந்தியா, தொடாத இலக்கை துரத்துமா?

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கி விமர்சனத்திற்குள்ளானது. குறிப்பாக ரோகித் சர்மா போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் அசத்த வேண்டிய இளம் வீரர்கள் முதல் போட்டியில் 150 ரன்களை கூட சேசிங் செய்ய முடியாமல் தோற்ற நிலையில் 2வது போட்டியில் 152 ரன்கள் மட்டுமே எடுத்து வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றது ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது.

அதனால் இத்தொடரின் கோப்பையை வென்று தங்களை தரவரிசையில் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது. அந்த நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் துவங்கிய முக்கியமான 3வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் காயத்தால் விளையாடாத குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டதுடன் சுமாராக செயல்பட்ட இசான் கிசான் நீக்கப்பட்டு ஐபிஎல் 2023 தொடரில் அசத்தி டெஸ்ட் தொடரில் சதமடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் யசஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

சவாலான இலக்கு:
அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி ப்ரெண்டன் கிங்குடன் சேர்ந்து 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கெய்ல் மேயர்ஸ் 25 (20) ரன்களில் அக்சர் படேல் சுழலில் சிக்கினார். அதே போல அடுத்த சில ஓவர்களிலேயே அடுத்ததாக வந்த ஜான்சன் சார்லஸை12 (14) ரன்களில் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் அடுத்ததாக களமிறங்கி அதிரடியாக விளையாட முயற்சித்த நிக்கோலஸ் பூரானையும் 20 (12) ரன்களில் அவுட்டாக்கினார்.

அத்துடன் மறுபுறம் நங்கூரமாக விளையாட முயற்சித்த பிரண்டன் கிங்கையும் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 42 (42) ரன்களில் அவுட்டாக்கிய அவர் மிடில் ஓவர்கள் முழுவதுமே வெஸ்ட் இண்டீஸை திணறடித்து அசத்தலாக பந்து வீசினார். அதனால் 15 ஓவரில் 106/4 என வெஸ்ட் இண்டீஸ் தடுமாறிய போது கேப்டன் ரோவ்மன் போவல் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க முயற்சித்து நாளையில் எதிர்புறம் சற்று தடுமாறிய சிம்ரோன் ஹெட்மேயர் 9 (8) ரன்களில் முகேஷ் குமார் வேகத்தில் ஆட்டமிழந்து சென்றார்.

- Advertisement -

ஆனாலும் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கேப்டன் போவல் இந்திய பவுலர்களுக்கு கட்டுக்கடங்காமல் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 40* (19) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 159/5 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கடந்த போட்டியில் வாய்ப்பே பெறாத அக்சர் படேல் இம்முறை 4 ஓவரில் வெறும் 24 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

முன்னதாக இந்த தொடர் முழுவதுமே 150 ரன்களை கூட சேசிங் செய்வது கடினமாக இருந்து வரும் நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 160 என்ற மிகச் சிறந்த பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:IND vs WI : 3 ஆவது போட்டிக்கான இந்திய அணியிலும் ஒரு மாற்றத்தை செய்துள்ள பாண்டியா – பிளேயிங் லெவன் இதோ

மறுபுறம் மீண்டும் பந்து வீச்சில் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்ட இந்தியா முதலிரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் 150+ ரன்களை அடிக்க முடியாமல் தான் தோற்றது. எனவே மீண்டும் சவாலன பிட்ச்சில் தற்போது 160 என்ற இதுவரை எடுக்காத கடினமான இலக்கை போராடி எடுத்து வெற்றி காணும் முனைப்புடன் இந்தியா விளையாடி வருகிறது.

Advertisement