IND vs WI : 3 ஆவது போட்டிக்கான இந்திய அணியிலும் ஒரு மாற்றத்தை செய்துள்ள பாண்டியா – பிளேயிங் லெவன் இதோ

Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது 2 போட்டியிலும் தோல்வியை சந்தித்து இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று கயானா நகரில் சற்றுமுன் துவங்கியது.

அதன்படி இந்த 3-ஆவது போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ராவ்மன் பவல் தங்களது அணி முதல் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இரண்டு மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக துவக்க வீரரான இஷான் கிசனுக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக விளையாடுகிறார்.

அதே போன்று ரவி பிஷ்னாய்க்கு பதிலாக குல்தீப் யாதவ் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். அதனை தவிர்த்து இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் இல்லை. அதோடு இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரில் இந்திய அணி தொடரை கைப்பற்றும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே அடைந்த 2 தோல்விகளில் இருந்து இந்திய அணி மீண்டு வருமா என்பதே அனைவரது எதிர்பார்ப்பதாகவும் உள்ளது. அதன்படி இன்றைய மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : வெற்றிகரமான மும்பை அணியிலிருந்து வெளியேறிய பின் – ஐபிஎல் கோப்பையை வென்ற 4 நட்சத்திர வீரர்கள்

1) சுப்மன் கில், 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) ஹார்டிக் பாண்டியா, 6) சஞ்சு சாம்சன், 7) அக்சர் படேல், 8) குல்தீப் யாதவ், 9) அர்ஷ்தீப் சிங், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) முகேஷ் குமார்.

Advertisement