வெற்றிகரமான மும்பை அணியிலிருந்து வெளியேறிய பின் – ஐபிஎல் கோப்பையை வென்ற 4 நட்சத்திர வீரர்கள்

Bravo Mumbai MI
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கோடைகாலத்தில் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐபிஎல் 2023 தொடரில் 5வது கோப்பையை வென்ற சென்னை வெற்றிகரமான அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. சொல்லப்போனால் 2010 சீசனிலேயே முதல் கோப்பையை வென்ற சென்னை இப்போது தான் 5வது கோப்பையை வென்றுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் தடுமாறினாலும் 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் மேஜிக் நிகழ்த்திய மும்பை அடுத்த 9 வருடங்களுக்குள் 5 கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்தது.

அத்துடன் பாண்டியா சகோதரர்கள், ஜஸ்பிரித் பும்ரா போன்ற தரமான வீரர்கள் அந்த அணியில் விளையாடியே நாளடைவில் இந்தியாவுக்காகவும் சர்வதேச அளவில் விளையாடும் வாய்ப்பை பெற்றனர். அந்தளவுக்கு அசால்டாக 5 கோப்பைகளை வென்று மகத்தான அணியாக திகழும் மும்பையில் சில நட்சத்திர வீரர்கள் விளையாடியும் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் மும்பை அணியிலிருந்து வெளியேறிய பின் ஐபிஎல் கோப்பையை முத்தமிட்ட 4 கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. ஷிகர் தவான்: இந்தியாவின் நட்சத்திர தொடக்க வீரரான இவர் 2008இல் தம்முடைய சொந்த ஊரான டெல்லிக்கு விளையாட தேர்வான போதிலும் 2009, 2010 சீசன்களில் சச்சின் தலைமையிலான மும்பை அணிக்காக வாங்கப்பட்டார். அதில் 2010இல் ஃபைனல் வரை மும்பை சென்று தோல்வியை சந்தித்ததால் கோப்பையை வெல்ல முடியாத அவர் 2011இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு வாங்கப்பட்டார்.

அதை தொடர்ந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்த அணியில் விளையாடி வந்த அவர் ஒரு வழியாக கடந்த 2016 சீசனில் டேவிட் வார்னர் தலைமையில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றார்.

- Advertisement -

2. ட்வயன் ப்ராவோ: வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரரான இவர் 2008 – 2010 வரையிலான 3 சீசனங்களில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். இருப்பினும் அதில் சிறப்பாக செயல்பட்டும் 2010 ஃபைனலில் மும்பைக்கு தோல்வியை பரிசளித்த சென்னை அணிக்காக அதற்கடுத்த வருடம் ப்ராவோ வாங்கப்பட்டார்.

அப்போதிலிருந்து தோனி தலைமையில் நம்பிக்கை நட்சத்திரமாக அசத்திய அவர் 2011 சீசனில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டார். மேலும் 2012, 2013, 2015 ஆகிய தொடர்களில் ஃபைனல் வரை சென்று தோல்வியை சந்தித்தாலும் 2018, 2021 ஆகிய வருடங்களில் மீண்டும் முதன்மை ஆல் ரவுண்டராக வெற்றிகளில் பங்காற்றி கோப்பையை வென்ற அவர் மொத்தம் 4 சாம்பியன் பட்டங்களுடன் விடை பெற்று தற்போது சென்னையின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

3. அஜிங்க்ய ரகானே: இந்தியாவின் மற்றொரு நட்சத்திர வீரரான இவர் 2008 – 2010 வரையிலான காலகட்டங்களில் சச்சின் தலைமையில் தம்முடைய சொந்த ஊரான மும்பை அணியில் விளையாடி ஐபிஎல் பயணத்தை துவங்கினார். இருப்பினும் அதில் 10 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்று கோப்பையை வெல்ல முடியாத அவர் 2011 – 2018 வரை பெரும்பாலான சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியும் கோப்பையை வெல்ல முடியவில்லை.

குறிப்பாக சில வருடங்களில் ராஜஸ்தானின் கேப்டனாக செயல்படும் கோப்பையை தொட முடியாத அவர் பின்னர் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு சென்றும் விளையாடும் 11 பேர் அணியில் கூட தொடர் வாய்ப்புகளை பெற முடியாமல் தவித்தார். அதனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் இந்த வருடம் தோனி தலைமையிலான சென்னை அணியில் யாருமே எதிர்பாராத வகையில் சரவெடியாக விளையாடி வெற்றியில் முக்கிய பங்காற்றி ஒரு வழியாக 15 வருடங்கள் கழித்து தன்னுடைய முதல் ஐபிஎல் கோப்பை முத்தமிட்டு இந்தியாவுக்காகவும் கம்பேக் கொடுத்தது மறக்க முடியாததாக அமைந்தது.

- Advertisement -

4. ஆஷிஷ் நெஹ்ரா: இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்ட இவரும் 2008இல் சச்சின் தலைமையில் தம்முடைய ஐபிஎல் கேரியரை தொடங்கினார். அதை தொடர்ந்து 2009 சீசனில் டெல்லி அணிக்காக வாங்கப்பட்ட அவர் சுமாராவே செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2014இல் சென்னைக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

இதையும் படிங்க:10 வருஷமா நாம ஐசிசி தொடரில் தோற்க இது தான் காரணம், இப்போவாச்சும் அதை செய்ங்க ப்ளீஸ் – பிசிசிஐக்கு உத்தப்பா கோரிக்கை

ஆனால் அதில் 2014 சீசனில் ஃபைனல் வரை மட்டுமே செல்ல முடிந்த அவர் அதைத்தொடர்ந்து ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டு ஒரு வழியாக 2016ஆம் ஆண்டு டேவிட் வார்னர் தலைமையில் தம்முடைய முதல் ஐபிஎல் கோப்பையை வென்றார். தற்போது குஜராத் அணியில் 2022 சீசனில் கோம்பையை வென்ற அவர் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.

Advertisement