வெஸ்ட் இண்டீஸ் அணியில் மேலும் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – 3 ஆவது போட்டி நடைபெறுமா?

Wi-1
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரானது ஆரம்பிக்கும் முன்னரே பாகிஸ்தான் நாட்டிற்கு பயணித்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் மூன்று வீரர்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டனர். அதில் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டென் காட்ரெல், ஆல்ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கைல் மேயர்ஸ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

wivspak 1

- Advertisement -

இதன் காரணமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வேளையில் தற்போது இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று நடைபெற இருக்கும் இந்த மூன்றாவது போட்டிக்கு முன்பாக மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

pakvswi

அதன்படி விக்கெட் கீப்பர் சாய் ஹோப், சுழற்பந்து பந்துவீச்சாளர் அக்கீல் ஹுசேன், ஆல்ரவுண்டர் ஜஸ்டின் கிரீஸ் ஆகிய மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களை தவிர அணியின் ஊழியர்கள் 2 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மேலும் தொற்றால் பாதிக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் கேப்டன் ஆனார் ஸ்டீவ் ஸ்மித் – புதிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு என்ன ஆச்சு?

இதன் காரணமாக இன்று நடைபெற இருக்கும் மூன்றாவது டி20 போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement