ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் கேப்டன் ஆனார் ஸ்டீவ் ஸ்மித் – புதிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு என்ன ஆச்சு?

Smith
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரானது டிசமபர் முதல் வாரம் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கேப்டனாக இடம்பெற்றிருந்த அணியின் அனுபவ வீரர் டிம் பெயின் மீது எழுந்த பாலியல் புகார் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதோடு அவருக்கு இந்த தொடரிலும் இடம் கிடைக்கவில்லை.

aus vs eng

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியின்போது சிறப்பான ஆதிக்கத்தை செலுத்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கண்டது.

அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற இருந்த வேளையில் பேட் கம்மின்ஸ் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என்றும் அணி நிர்வாகம் அறிவித்தது.

cummins

இதற்கு காரணம் யாதெனில் கொரோனா ஏற்பட்ட நபருடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததால் அவர் தற்போது தனிமைப்படுத்த பட்டுள்ளார். இதன் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு கம்மின்ஸ் திரும்பும்போது கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இனிமேதான் விராட் கோலி இன்னும் டேஞ்சரா மாறுவாரு. அதை நீங்க பாப்பீங்க – கம்பீர் ஓபன்டாக்

2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது பால் டேம்பரிங் விஷயத்தில் சர்ச்சையில் சிக்கிய ஸ் மித் அப்போது ஓராண்டு தடை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது கேப்டன் பொறுப்பையும் இழந்தார். அதன்பிறகு மீண்டும் அவர் கேப்டன் பதவியை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement