இனிமேதான் விராட் கோலி இன்னும் டேஞ்சரா மாறுவாரு. அதை நீங்க பாப்பீங்க – கம்பீர் ஓபன்டாக்

Gambhir
- Advertisement -

இந்திய அணியின் 3 வடிவ கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மோசமான பேட்டிங் பார்மினால் தவித்து வருகிறார். 33 வயதாகும் விராட்கோலி அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருந்தார். மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 2019ஆம் ஆண்டு சதம் அடித்த பிறகு இதுவரை சதம் அடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரது ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Kohli

- Advertisement -

ஆனால் இந்த எதிர் மறையான விமர்சனங்களுக்கு மத்தியில் விராட் கோலியின் அடுத்த கட்டம் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் பேசியுள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி கேப்டனாக இருக்கிறாரோ இல்லையோ இனி அவர் இன்னும் டேஞ்சரான பேட்ஸ்மேனாக மாறப்போகிறார். ஏனெனில் கேப்டன்சி என்கிற மிகப்பெரிய சுமை அவர் தோள்களில் இருந்து இறங்கி உள்ளது.

அதன் காரணமாக ஒயிட்பால் கிரிக்கெட்டில் அவர் முன்பு இருந்ததைவிட மிகுந்த பலத்துடன் திரும்புவார். அதேபோன்று அவரது கரியரின் பெஸ்ட் பார்மில் இருந்ததை விட இன்னும் டேஞ்சரான பேட்ஸ்மேனாக மாறுவார். என்னை பொறுத்தவரை நிச்சயம் அவர் ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஆதிக்கத்தை செலுத்துவார் அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் என கம்பீர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

kohli 1

நிச்சயம் அவர் மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை கையிலெடுத்து இந்திய அணிக்கு பெருமை சேர்ப்பார். அதோடு ஒயிட் பால் கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நேரம் நெருங்கிவிட்டது. இனி அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கேப்டனாக நீடிக்கப்போவதால் பேட்டிங்கில் இனி வேற லெவல் ஆதிக்கத்தை செலுத்த தயாராகி வருகிறார் என கம்பீர் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை அமைத்த நட்டு. அதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா? – குவியும் வாழ்த்துக்கள்

எப்போதுமே விராட் கோலிக்கு எதிராக முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வரும் கம்பீர் இம்முறை விராட் கோலியை ஆதரித்து இந்த கருத்தை வெளியிட்டுள்ளது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இருந்தாலும் அவர் கூறியது போலவே விராட்கோலி இழந்த தனது பார்மை மீட்டெடுத்து பலமாக திரும்பும் பட்சத்தில் அது ரசிகர்களாகிய நமக்கு மட்டுமின்றி இந்திய அணிக்கும் பெரும் மகிழ்ச்சியை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement