இந்திய வீரரான இவரை போன்று உழைத்தால் மட்டுமே சாதிக்க முடியும் – மே.இ வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை

Estwick

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாளை மோத இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை பிற்பகல் 1 30 மணிக்கு துவங்குகிறது.

Cup

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன் வங்கதேச அணியின் துணை பயிற்சியாளரான ரோடி எஸ்ட்விக் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் இளம் வீரர்களின் முன்னேற்றம் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. ஹெட்மையர், பூரான் மற்றும் ஹோப் ஆகியோர் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளனர்.

நீங்கள் எந்த அளவுக்கு கடினமாக உழைக்கிறார்களோ அந்த அளவிற்கு முன்னேறுவீர்கள். அதற்கு உதாரணம் யாரெனில் இந்தியன் கேப்டன் கோலியை நான் கூறுவேன் அவருடைய இந்த நிலையை எட்ட அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். அவரிடம் இருந்து அந்த உழைப்பினை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவரின் இந்த அபார வளர்ச்சிக்கு காரணம் அவருடன் இருக்கும் கடின உழைப்பும், முயற்சியுமே காரணம்.

உங்களுக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்தாலும் உழைத்தால் மட்டுமே சாதிக்க முடியும் எனவே கடுமையாக உழையுங்கள் நீங்களும் சாதிக்கலாம் என்று அவர் கூறினார். மேலும் இந்த தொடரில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். வெற்றியை ருசிக்க அவர்கள் தொடங்கி விட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

- Advertisement -

wi 1

இந்திய அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் கடுமையான போராட்டத்தை கொடுப்பார்கள் என்றும் நான் நம்புகிறேன் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.