IND vs WI : அமெரிக்காவில் ஆரம்பத்திலேயே வெற்றி பறிபோனதா? 4வது டி20யில் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு – காரணம் இதோ

IND vs WI 4
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே விமர்சனத்திற்குள்ளானது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இந்தியாவுக்கு முதலிரண்டு போட்டிகளில் திலக் வர்மாவை தவிர்த்து பெரும்பாலான இளம் பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்டு 2016க்குப்பின் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக முதல் முறையாக அடுத்தடுத்த டி20 போட்டிகளில் தலைகுனியும் தோல்வியை பெற்றுக் கொடுத்தது ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது.

இருப்பினும் முக்கியமான 3வது போட்டியில் திலக் வர்மாவுடன் இணைந்து நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் முதல் முறையாக தமக்கே உரித்தான சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் அடித்து நொறுக்கி 84 ரன்கள் குவித்தார். அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்ட நிலையில் இத்தொடரின் கடைசி 2 போட்டிகள் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஆகஸ்ட் 12, 13 ஆகிய அடுத்தடுத்த நாட்களில் நடைபெற உள்ளது.

- Advertisement -

அந்த 2 போட்டிகளிலுமே வென்றால் மட்டுமே இந்த தொடரை வென்று 2016க்குப்பின் வெஸ்ட் இண்டீஸ்க்கு ஒரு டி20 தொடரில் சந்திக்கும் மற்றுமொரு அவமான தோல்வியிலிருந்து இந்தியாவால் தப்ப முடியும். அந்த சூழ்நிலையில் இத்தொடரில் 4வது போட்டி சற்று முன் லாடர்ஹில் நகரில் துவங்கிய நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

ஏனெனில் இந்த மைதானத்தில் வரலாற்றில் கடந்த 2010 முதல் இதுவரை நடைபெற்றுள்ள 14 சர்வதேச டி20 போட்டிகளில் 11 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான் வென்றுள்ளன. வெறும் 2 முறை மட்டுமே சேசிங் செய்த அணிகள் வென்ற நிலையில் 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. அந்தளவுக்கு ஆரம்பத்தில் பேட்டிங்க்கு அதிக சாதகமாக இருக்கும் இந்த மைதானம் நேரம் செல்ல செல்ல சுழல் மற்றும் மித வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகமாக கை கொடுத்து சேசிங் செய்வதை கடினமாக்கி விடும்.

- Advertisement -

குறிப்பாக கடந்த 2016இல் இங்கு நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 246 ரன்களை இந்தியா முரட்டுத்தனமாக அடித்த வெறித்தனமாக  சேசிங் செய்தும் வெறும் 1 ரன்னில் வெற்றியை கோட்டை விட்டது. எனவே அந்த வரிசையில் இந்த போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ததால் இந்தியாவின் வெற்றி பறிபோனதா என்ற கவலை ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எப்போதுமே வருங்காலத்தை கணிக்க முடியாது என்பதால் ஆரம்பத்திலேயே பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெஸ்ட் இண்டீஸை 150 – 180 போன்ற ரன்களுக்கு கட்டுப்படுத்தம் பட்சத்தில் இந்தியாவுக்கு வெற்றி உறுதியாக கிடைக்கலாம்.

அதற்கேற்றார் போல் இந்த தொடரில் ஆரம்பம் முதலே இந்தியாவின் பேட்டிங் தான் சற்று தடுமாறுகிறதே தவிர பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக ஸ்பின்னர்கள் காட்டுத்தனமாக அடிக்கும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை முடிந்தளவுக்கு குறைந்த ரன்களிலேயே கட்டுபடுத்தி வருகிறார்கள். எனவே இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெறுவதற்கு அவர்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளனர்.

இதையும் படிங்க:கரீபியன் பிரீமியர் லீக் மட்டுமல்ல மீண்டும் சூப்பர் கிங்ஸ் அணியுடன் கைகோர்க்க இருக்கும் அம்பத்தி ராயுடு – எப்படி தெரியுமா?

அந்த வகையில் டி20 தரவரிசையில் தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிப்பதற்காக இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ள இந்திய அணியில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement