கரீபியன் பிரீமியர் லீக் மட்டுமல்ல மீண்டும் சூப்பர் கிங்ஸ் அணியுடன் கைகோர்க்க இருக்கும் அம்பத்தி ராயுடு – எப்படி தெரியுமா?

Ambati-Rayudu
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த மாபெரும் இறுதி போட்டியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி அனுபவ வீரரான அம்பத்தி ராயுடு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். முன்னதாக மும்பை அணிக்காக விளையாடி வந்த அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் வரை 6 ஆண்டுகள் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார்.

மும்பை அணியில் இருந்து வெளியேறிய பிறகு சிஎஸ்கே அணியால் தேர்வு செய்யப்பட்ட அவர் மிகச் சிறப்பான பங்களிப்பை சென்னை அணிக்காக வழங்கியதால் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமடைந்தார். அதோடு தற்போது 37 வயதான அவர் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டதால் வெளிநாடுகளில் நடக்கும் டி20 லீக் தொடர்களில் விளையாடுவதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் அண்மையில் முதல் முறையாக அமெரிக்காவில் துவங்கப்பட்ட மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தமான அவர் பிசிசிஐ-யின் விதிமுறைகள் காரணமாக அந்த தொடரில் விளையாட முடியாமல் போனது. ஆனால் தற்போது எதிர்வரும் கரீபியன் லீக் தொடரில் அவர் செயின்ட் கிட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இது குறித்து பேசியிருந்த ராயுடு கூறுகையில்:

கரீபியன் லீக் தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும், நிச்சயம் தன்னுடைய பங்களிப்பை அந்த அணிக்கு வழங்க இருப்பதாகவும் பேசி இருந்தார். இதன் மூலம் அவர் கரீபியன் லீக் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது கரீபியன் லீக் தொடரை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 லீக்கிலும் அவர் பங்கேற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக நடத்தப்பட்ட RSA டி20 லீக் தொடரானது அடுத்த ஆண்டு இரண்டாவது சீசனாக நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியுடன் அம்பத்தி ராயுடு ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : எதிர்காலத்தை பற்றி யோசிக்கப்போவதில்லை. இனிமே என் போகஸ் இதுல மட்டும் தான் – ப்ரித்வி ஷா அதிரடி

ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திற்கும், அவருக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு இருப்பதால் நிச்சயம் அவரது அனுபவம் அந்த ஜோகன்னஸ்பர்க் அணிக்கும் உதவும் என்பதால் ராயுடுவை மீண்டும் சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அந்த அணியில் இணைக்க காத்திருக்கிறது. அதேபோன்று ராயுடுவும் அந்த அணிக்காக விளையாட ஆர்வம் காட்டுகிறார் என்பதனால் நிச்சயம் அவர் மீண்டும் சூப்பர் கிங்ஸ் அணியுடன் விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement