எதிர்காலத்தை பற்றி யோசிக்கப்போவதில்லை. இனிமே என் போகஸ் இதுல மட்டும் தான் – ப்ரித்வி ஷா அதிரடி

Prithvi-Shaw
- Advertisement -

இந்திய அணியின் இளம் அதிரடி துவக்க வீரரான பிரித்வி ஷா 19 வயது உட்பட்டோர் இந்திய அணிக்காக கேப்டனாக செயல்பட்டதோடு மட்டுமின்றி கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக மிக இளம் வயதில் அறிமுகமான அவர் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். ஆனாலும் அதன் பிறகு பார்ம் அவுட்டானது, காயமடைந்தது, ஊக்க மருந்து சோதனை என பல்வேறு சோதனைகளை சந்தித்த ப்ரித்வி ஷா மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

இதுவரை இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அவர் இடம் பிடித்து விளையாடி இருந்தாலும் கடந்த 2021-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் விளையாட முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி தனது திறமையை நிரூபிக்கும் வகையில் செயல்பட்டு வந்த ப்ரித்வி ஷா அண்மையில் நடைபெற்ற துலீப் டிராபி தொடரில் விளையாடினார். ஆனால் அதற்கடுத்து தியோதர் டிராபியில் விளையாடாமல் இங்கிலாந்து சென்றடைந்தார். இதன் காரணமாக அவர் மீது பலரும் அதிருப்தியை வெளிப்பட்டனர்.

- Advertisement -

ஏனெனில் இங்கு உள்நாட்டில் நடைபெறும் தொடரில் விளையாடாமல் இங்கிலாந்து சென்று அவர் என்ன செய்யப் போகிறார்? என்று பலரும் பேசி வந்த வேளையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ப்ரித்வி ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் 153 பந்துகளை சந்தித்து 11 சிக்ஸர்கள் மற்றும் 28 பவுண்டரிகள் என 244 ரன்கள் குவித்து அசத்திய ப்ரிதிவி ஷா ஏகப்பட்ட சாதனைகளையும் செய்துள்ளார்.

இதன் மூலம் நிச்சயம் இந்திய அணிக்காக திரும்பும் வாய்ப்பையும் அவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்நிலையில் இங்கிலாந்தில் தனது மிகச் சிறப்பான ஆட்டம் குறித்து பேசியிருந்த ப்ரித்வி ஷா கூறுகையில் : நான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிக்காமல் தற்போது என்னுடைய ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன்/ தற்போதைக்கு என்னுடைய எந்த ரெக்கார்டு குறித்த எண்ணமும் எனக்கு கிடையாது.

- Advertisement -

எனது அணிக்காக நான் மிகச் சிறப்பாக விளையாட வேண்டும். என்னுடைய பேட்டின் மூலம் ரன்களை குவித்து அனைவருக்கும் பதில் அளிக்க விரும்புகிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக அனைத்து சூழ்நிலைகளிலும் அனைத்து பிட்ச்களிலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நினைக்கிறேன். இங்கிலாந்து வந்தபோது குளிர் என்னை வாட்டி வதைத்தது. அதனால் குளிரை தடுக்கும் உடைகளை அணிந்து விளையாடி வருகிறேன்.

இதையும் படிங்க : IND vs WI : எல்லா நாட்டுலயும் அஹமதாபாத் மாதிரி பிட்ச் கிடைக்கும்னு எதிர்பாத்தா எப்டி? கில்லுக்கு – முன்னாள் இந்திய வீரர் அட்வைஸ்

இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்குமே நன்றி. நிச்சயம் இந்த தொடரின் மூலம் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து வரும் போட்டியிலும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எனது திறனை நிரூபிப்பேன் என பிரித்வி ஷா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement