- Advertisement -
உலக கிரிக்கெட்

30/5 என சரிந்த வெ.இ.. உலக சாதனை பார்ட்னர்ஷிப்.. சூப்பர் 8க்கு தகுதி.. நியூஸிலாந்து நாக் அவுட்டானதா?

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜூன் 13ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு ட்ரினிடாட் நகரில் 26வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியை அதனுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ப்ரண்டன் கிங் 9, ஜான்சன் சார்லஸ் 0, நிக்கோலஸ் பூரான் 17, ராஸ்டன் சேஸ் 0, கேப்டன் ரோவ்மன் போவல் 1 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தனர். அதனால் 30/5 என சரிந்த வெஸ்ட் இண்டீஸ் 120 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய ஷேர்பான் ரூதர்போர்ட் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அசத்தல்:
அவருக்கு எதிர்ப்புறம் வந்த அகில் ஹொசைன் 15, ஆண்ட்ரே ரசல் 14, செபார்ட் 13 ரன்கள் எடுத்து ஓரளவு கை கொடுத்து ஆட்டமிழந்தனர். அதை பயன்படுத்தி மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரூதர்போர்ட் கடைசி வரை அவுட்டாகாமல் 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 68* (39) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார் அதனால் தப்பிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 149/9 ரன்கள் குவித்தது.

குறிப்பாக 30/5 என சரிந்த அந்த அணி கடைசி 5 விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 5வது விக்கெட்டுக்குப் பின் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அணி என்ற உலக சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைத்துள்ளது. இதற்கு முன் 2021 டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிராக பப்புவா நியூ கினியா 5 விக்கெட்டுகள் விழுந்த பின்பும் 113 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 150 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் அதிரடி காட்டிய ஃபின் ஆலனும் 26 (23) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சனை 1 ரன்னில் அவுட்டாக்கிய மோட்டி மறுபுறம் தடுமாறிய ரச்சின் ரவீந்தராவையும் 10 ரன்னில் காலி செய்தார்.new

அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த மிட்சேலையும் 12 ரன்னில் அவுட்டாக்கினார். அதனால் 63/5 என தடுமாறிய நியூஸிலாந்துக்கு கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 40 (33) ரன்கள் எடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் ஜிம்மி நீசம் 10, மிட்சேல் சாட்ன்னர் 21* (12) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் நியூசிலாந்து 136/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 3வது வெற்றியை பதிவு செய்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க: அவங்கள இப்படி பாக்குறது மகிழ்ச்சியா இருக்கு.. அமெரிக்க அணியில் விளையாடும் இந்தியர்கள் குறித்து – ரோஹித் சர்மா

அந்தளவுக்கு அசத்திய வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 3, குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் எடுத்தனர். மறுபுறம் 2 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்த நியூசிலாந்து தொடரை விட்டு வெளியேறுவது 90% உறுதியாகியுள்ளது. ஏனெனில் அதே பிரிவில் 2 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் 2 வெற்றிகளை பெற்று விட்டது. அதனால் நியூஸிலாந்து தனது கடைசி 2 போட்டியில் வென்றாலும் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

- Advertisement -