அவங்கள இப்படி பாக்குறது மகிழ்ச்சியா இருக்கு.. அமெரிக்க அணியில் விளையாடும் இந்தியர்கள் குறித்து – ரோஹித் சர்மா

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-ஆவது லீக் போட்டியானது நேற்று நியூயார்க் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அமெரிக்கா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை மட்டுமே குவித்தது.

இந்திய அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் பந்துவீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதேபோன்று ஹார்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 18.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சூரியகுமார் யாதவ் 50 ரன்களையும், ஷிவம் துபே 31 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த மைதானம் பேட்டிங் செய்ய கடினமானது என்று அனைவருக்கும் தெரியும் இருந்தாலும் ஷிவம் துபே மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

- Advertisement -

இந்த போட்டியில் விளையாடிய அமெரிக்க அணியை சேர்ந்த பல வீரர்களை நான் இந்தியாவில் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் சில போட்டிகளிலும் விளையாடி இருக்கிறேன். அப்படி இந்தியாவில் பார்த்த வீரர்கள் இங்கு வந்து விளையாடுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் அனைவருமே கடினமான உழைப்பின் மூலம் இங்கு வந்து விளையாடி வருகின்றனர்.

இதையும் படிங்க : கோப்பையை கோட்டை விட டிராவிட் – ரோஹித்தின் விஷப்பரீட்சையால்.. வாழ்நாளில் 2 மோசமான சாதனை படைத்த கோலி

இந்த மைதானத்தில் இங்கு வந்து விளையாடுவது என்பது எளிதான விடயம் கிடையாது. இருப்பினும் தற்போது நாங்கள் 3 வெற்றிகளை பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதில் மகிழ்ச்சி. சூரியகுமார் யாதவ் வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement