கோப்பையை கோட்டை விட டிராவிட் – ரோஹித்தின் விஷப்பரீட்சையால்.. வாழ்நாளில் 2 மோசமான சாதனை படைத்த கோலி

Virat Kohli 2.jpeg
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 11ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 3வது வெற்றியை பதிவு செய்த இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 111 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஸ்டீபன் டைலர் 24, நிதிஷ் குமார் 27 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்ட்டுகளை எடுத்தார். அதைத் துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி 0, ரோஹித் சர்மா 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் ரிசப் பண்ட் 18, சிவம் துபே 31*, சூரியகுமார் யாதவ் 50* ரன்கள் அடித்து 18.2 ஓவரில் இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். அதனால் பச்சமாக நேத்ராவல்கர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் அமெரிக்கா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

தேவையற்ற சோதனை:
முன்னதாக இந்தப் போட்டியில் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டான விராட் கோலி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தார். கடந்த 2012 – 2022 வரை ஒருமுறை கூட டி20 உலகக் கோப்பையில் டக் அவுட்டாகாமல் அதிக ரன்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ள அவர் முதல் முறையாக இந்த அவமான சாதனையை பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த உலகக் கோப்பைக்கு முன்பாக விராட் கோலி இந்தியாவுக்கு கடைசியாக கடந்த ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரின் கடைசிப் போட்டியில் களமிறங்கினார். அப்போட்டியில் டக் அவுட்டான அவர் அதன் பின் களமிறங்கிய தற்போதைய டி20 உலகக் கோப்பையில் இதுவரை 1, 4, 0 ரன்களில் அவுட்டாகியுள்ளார். இதன் வாயிலாக தம்முடைய 15 வருட சர்வதேச கேரியரில் முதல் முறையாக 4 தொடர்ச்சியான போட்டிகளில் (0, 1, 4, 0) ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி விராட் கோலி மற்றுமொரு மோசமான சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அது போக டி20 உலகக் கோப்பையில் 3வது இடத்தில் களமிறங்கிய 24 இன்னிங்ஸில் விராட் கோலி 1 முறை மட்டுமே ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டானார். ஆனால் அந்த இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் களமிறங்கிய 4 இன்னிங்ஸில் விராட் கோலி 4 முறை ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகியுள்ளார். அந்த வகையில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி ராஜாவாக எதிரணிகளை சொல்லி அடித்து வந்த விராட் கோலி தற்போது ஓப்பனிங்கில் மோசமான சாதனைகளை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்த பிட்ச்ல எப்படி போடனும்ன்னு அவர் சொல்லிக் கொடுத்தாரு.. அமெரிக்காவை வீழ்த்திய ஆட்டநாயகன் அர்ஷ்தீப் பேட்டி

ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபி அணிக்காக ஓப்பனிங்கில் விளையாடி ஆரஞ்சு தொப்பையை வென்றதால் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அவரை இந்திய அணியில் துவக்க வீரராக களமிறங்கியுள்ளனர். ஆனால் அந்த தேவையற்ற விஷப்பரிட்சை இதுவரை இந்தியாவுக்கு பாதகத்தையே கொடுத்துள்ளது. அதனால் கோபமடையும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்சிபி அணியும் இந்தியாவும் ஒன்றா? என்றும் விராட் கோலியை இப்படி பயன்படுத்தினால் கோட்டை விட்டு விடுவோம் என்று அவர்களை விளாசி வருகின்றனர்.

Advertisement